Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சஜித் பிரேமதாச இந்தியா பயணம்; புதுடில்லியில் முக்கிய சந்திப்புகள்

சஜித் பிரேமதாச இந்தியா பயணம்; புதுடில்லியில் முக்கிய சந்திப்புகள்

10 months ago
in செய்திகள்

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான சஜித் பிரேமதாச நேற்று (03) இந்தியாவுக்கான பயணமொன்றை மேற்கொண்டுள்ளார்.

இந்திய அரசின் அழைப்பின்பேரில் இந்த பயணத்தை மேற்கொண்டுள்ள சஜித், புதுடில்லியில் இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்ஷங்கர், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் டோவால் ஆகியோரைச் சந்திக்க ஏற்பாடாகியுள்ளது. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை சஜித் சந்திப்பதற்கான ஏற்பாடுகள் எதுவும் நேற்றுவரை நடந்திருக்கவில்லை.

இந்திய சந்திப்புகளுக்கு எதிர்க்கட்சித் தலைவருடன் முக்கியமான பிரதிநிதிகளை அழைத்துவர இந்தியத் தரப்பில் அனுமதியளிக்கப்பட்டிருந்தது. ஆனாலும், அப்படி எவரும் சஜித்துடன் செல்லவில்லை. ஐக்கிய மக்கள் சக்தியின் நிதிப் பொறுப்பாளர் என்று சொல்லப்படும் லக்ஷ்மன் பொன்சேகா, எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் பணிபுரியும் உத்தியோகத்தர்கள் இருவர் உட்பட்டோரே இந்த விஜயத்தில் இணைந்துள்ளதாக அறியமுடிந்தது.

இது வெளிப்படையானதும் நடப்பு மட்டத்திலானதுமான சந்திப்பாக இந்திய தரப்பில் ஒழுங்குபடுத்தப்பட்டபோதும் இதனை மிக இரகசியமாக வைத்திருக்க சஜித் பிரேமதாச கருதியிருப்பதாக அறியமுடிந்தது. நேற்றுக் காலை சஜித்தின் பயணம் குறித்து அறிய ஊடகர்கள் ஐக்கிய மக்கள் சக்தியின் நிர்வாக மட்டத்தினரைத் தொடர்புகொண்டபோதும் அவர்கள் எவரும் இதனை அறிந்திருக்கவில்லை. கட்சித்தலைவர் வெளிநாடு சென்றுவிட்டாரா என்று அவர்களே ஊடகர்களிடம் கேட்டறிந்து கொண்டனர்.

தனது இந்த விஜயத்தின்போது தனது கூட்டணியிலுள்ள தமிழ்க் கட்சிகளின் தலைவர் ஒருவரையாவது சஜித் அழைத்துச் சென்றிருந்தால் இப்போதுள்ள நிலைமைகளை இந்தியாவுக்கு எடுத்துச்சொல்ல வாய்ப்பு இருந்திருக்குமென்று விசனம் தெரிவிக்கப்படுவதையும் அவதானிக்க முடிந்தது.

எவ்வாறாயினும், இம்மாத நடுப்பகுதியில் நடக்கவுள்ள எதிர்க்கட்சிகளின் கூட்டு அரச எதிர்ப்புப் பேரணியை ஐக்கிய மக்கள் சக்தி ஆதரிக்காத நிலையில் அக்கட்சியின் தலைமை மீது கூட்டணிக் கட்சிகள் கொண்டிருந்த விசனம் சஜித்தின் இந்திய விஜயத்துடன் மேலும் தீவிரமடைந்திருப்பதாக அறியமுடிந்தது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

கப்பல் வழியாக இந்தியா சென்ற 13 பேர் சந்தேகத்தில் கைது!
செய்திகள்

கப்பல் வழியாக இந்தியா சென்ற 13 பேர் சந்தேகத்தில் கைது!

September 7, 2026
பாடசாலைகளின் மூன்றாம் தவணை இரண்டாம் கட்டம் இன்று ஆரம்பம்!
செய்திகள்

பாடசாலைகளின் மூன்றாம் தவணை இரண்டாம் கட்டம் இன்று ஆரம்பம்!

September 7, 2026
அமேசான் சரக்கு விமானம் விபத்து; 5 பேர் உயிரிழப்பு
உலக செய்திகள்

அமேசான் சரக்கு விமானம் விபத்து; 5 பேர் உயிரிழப்பு

September 7, 2026
மட்டுநகரில் பெண்ணின் தங்க சங்கிலியை பறிக்க முயற்சி; சிக்கிய சிசிடிவி காட்சி
செய்திகள்

மட்டுநகரில் பெண்ணின் தங்க சங்கிலியை பறிக்க முயற்சி; சிக்கிய சிசிடிவி காட்சி

September 6, 2026
தலைமன்னார் கடற்பரப்பிலிருந்து கைவிடப்பட்டிருந்த நிலையில் சிறுவர்கள் உள்ளிட்ட11 பேர் மீட்பு
செய்திகள்

தலைமன்னார் கடற்பரப்பிலிருந்து கைவிடப்பட்டிருந்த நிலையில் சிறுவர்கள் உள்ளிட்ட11 பேர் மீட்பு

September 6, 2026
அரசியல்வாதிகளை காரணமின்றி கைதுசெய்கிறது இந்த அரசு; ரணில்
செய்திகள்

அரசியல்வாதிகளை காரணமின்றி கைதுசெய்கிறது இந்த அரசு; ரணில்

September 6, 2026
Next Post
வட்ஸ் அப் வழியாக பணம் கோரும் மோசடிகள் அதிகரிப்பு; CID எச்சரிக்கை

வட்ஸ் அப் வழியாக பணம் கோரும் மோசடிகள் அதிகரிப்பு; CID எச்சரிக்கை

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.