Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஆரம்பப் பாடசாலை அதிபர் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது; அநுராதபுரத்தில் சம்பவம்

ஆரம்பப் பாடசாலை அதிபர் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது; அநுராதபுரத்தில் சம்பவம்

10 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

அநுராதபுரம், எப்பாவல பிரதேசத்தில் உள்ள ஆரம்பப் பாடசாலை ஒன்றின் அதிபர், ஒரு கிலோவிற்கும் அதிகமான ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

சுமார் ஒரு வாரத்திற்கு முன்னர் எப்பாவல, நல்லமுதாவ வீதியில் வைத்து கைது செய்யப்பட்ட 30 வயதுடைய ஒருவரிடம் இருந்து பெறப்பட்ட தகவலின் அடிப்படையில், அநுராதபுரம் குற்றத்தடுப்புப் பிரிவினர் இந்தச் சுற்றிவளைப்பை மேற்கொண்டனர்.

இதன்போது, குறித்த அதிபருக்குச் சொந்தமானது எனக் கூறப்படும், எப்பாவல, அதகல பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றுக்கு பின்னால் புதைக்கப்பட்டிருந்த 1 கிலோ 185 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இது தவிர, குறித்த அதிபரால் அருகில் உள்ள ஒரு குளத்தில் வீசப்பட்டிருந்த போதைப்பொருளை அளக்கப் பயன்படுத்தப்படும் மின்னணுத் தராசு மற்றும் பொலித்தீன் சீலர் இயந்திரம் ஆகியனவும் கண்டுபிடிக்கப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட குறித்த அதிபரின் மனைவி, தேசிய மக்கள் சக்தியின் பேலியகொடை நகரசபையின் உறுப்பினர் என பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேலும், குறித்த அதிபரின் 22 வயது மகனும் ஒரு மாதத்திற்கு முன்னர் 25 கிராம் ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சந்தேக நபர்கள் இருவரும் நீண்டகாலமாக அப்பகுதியில் போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்ததாக ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

பாடசாலை அதிபர் ஒருவர் இத்தகைய குற்றச் செயல்களில் ஈடுபட்டமை காரணமாக அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் குறித்து அநுராதபுரம் குற்றத் தடுப்புப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

புதிய சிம் அட்டைகளை பெற நேரலை புகைப்படங்கள் கட்டாயம்
செய்திகள்

புதிய சிம் அட்டைகளை பெற நேரலை புகைப்படங்கள் கட்டாயம்

September 13, 2026
அனுர, மஹிந்தவை தொடர்ந்து சஜித்தும் அரசியல் பேரணி நடத்த தயாராகிறார்
செய்திகள்

அனுர, மஹிந்தவை தொடர்ந்து சஜித்தும் அரசியல் பேரணி நடத்த தயாராகிறார்

September 13, 2026
அம்பாறை ஆற்றில் இனந்தெரியாத ஆணின் சடலம் மீட்பு
செய்திகள்

அம்பாறை ஆற்றில் இனந்தெரியாத ஆணின் சடலம் மீட்பு

September 13, 2026
ஞானசார தேரர் தலைமறைவு?;  மீண்டும் கைது செய்ய சிறை அதிகாரிகள் முயற்சி
செய்திகள்

ஞானசார தேரர் தலைமறைவு?; மீண்டும் கைது செய்ய சிறை அதிகாரிகள் முயற்சி

September 13, 2026
ஈரான் மீது போர் தொடுத்த முடிவுக்கு சிறிதும் வருத்தமில்லை; டிரம்ப்
உலக செய்திகள்

ஈரான் மீது போர் தொடுத்த முடிவுக்கு சிறிதும் வருத்தமில்லை; டிரம்ப்

September 13, 2026
பாகிஸ்தானில் ஹிந்து சிறுமிகள் கடத்தப்பட்டு கட்டாய மதமாற்ற திருமணம்; தொடரும் அவலம்
உலக செய்திகள்

பாகிஸ்தானில் ஹிந்து சிறுமிகள் கடத்தப்பட்டு கட்டாய மதமாற்ற திருமணம்; தொடரும் அவலம்

September 13, 2026
Next Post
மட்டக்களப்பு சந்திவெளியில் சட்டவிரோத கசிப்பு உற்பத்திக்கு எதிராக பொலிஸார் மற்றும் பொதுமக்கள் இணைந்த நடவடிக்கை

மட்டக்களப்பு சந்திவெளியில் சட்டவிரோத கசிப்பு உற்பத்திக்கு எதிராக பொலிஸார் மற்றும் பொதுமக்கள் இணைந்த நடவடிக்கை

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு