Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தாயின் கண்முன் இளைஞரை நிர்வாணமாக்கிய வழக்கில் முக்கிய சந்தேகநபர் கைது

தாயின் கண்முன் இளைஞரை நிர்வாணமாக்கிய வழக்கில் முக்கிய சந்தேகநபர் கைது

10 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

யாழ்ப்பாணத்தில் இளைஞர் ஒருவரை, அவருடைய தாயின் கண்முன் நிர்வாணமாக்கி சித்திரவதைக்கு உட்படுத்திய சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 11 மாதங்களுக்கு முன்னர் இந்த சம்பவம் இடம்பெற்றிருந்த போதிலும், பொலிஸ் உயர்மட்டத்தில் இருந்த செல்வாக்குக் காரணமாக அந்த நபர் கைது நடவடிக்கைகளில் இருந்து தப்பித்து வந்துள்ளார்.

இவ்வாறான பின்னணியிலேயே, திருநெல்வேலி பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஒருவரை சந்தேகநபர் பார்வையிட வந்த வேளை பொலிஸ் புலனாய்வுத் துறையினரால் நேற்று (06) கைது செய்யப்பட்டுள்ளார்.

கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு அவருக்கு எதிரான விசாரணைகள் இடம்பெற்று வருவதுடன், சந்தேகநபரை நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

கடந்த ஓரிரு மாதங்களுக்கு முன்னர் சந்தேகநபர் தொடர்பான தகவல்கள் கிடைக்கப்பெற்று அவரை கைது செய்வதற்காக சிவில் உடையில், தனியார் ஒருவரின் ஓட்டோவில் பொலிஸார் சென்றிருந்தனர்.

இதன்போது, பொலிஸாரின் பிடியில் இருந்து சந்தேகநபர் தப்பிச்சென்றிருந்தார். இதையடுத்து, “சந்தேகநபரை கைது செய்வதற்கு எதற்கு சிவில் உடையில் தனியாரின் ஓட்டோவில் சென்றீர்கள்?” என்று பொலிஸாருக்கு எதிரான விசாரணைகள் இடம்பெற்றதே தவிர, சந்தேகநபர் தொடர்பான விடயங்கள் கருத்திற்கொள்ளப்படவில்லை.

இதற்கு, சந்தேகநபருக்கும் வடக்கு மாகாணத்தில் கடமையாற்றும் பொலிஸ் உயர் அதிகாரிகளுக்கும் இடையில் இருந்த நெருக்கமான தொடர்புகளே காரணம் என்று சுட்டிக்காட்டப்பட்டது.

இவ்வாறான நிலையிலேயே, சந்தேகநபர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

தெஹிவளை கைக்குண்டுத் தாக்குதல்; இரு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் குறித்து ஐ.நா கவலை!
செய்திகள்

தெஹிவளை கைக்குண்டுத் தாக்குதல்; இரு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் குறித்து ஐ.நா கவலை!

September 12, 2026
ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதிகள் அல்ல அவர்கள் தீவிரவாதிகள் !
செய்திகள்

ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதிகள் அல்ல அவர்கள் தீவிரவாதிகள் !

September 12, 2026
கைது செய்யப்பட்ட ஷிரான் பாஸிக்கின் தந்தை விளக்கமறியலில்
செய்திகள்

கைது செய்யப்பட்ட ஷிரான் பாஸிக்கின் தந்தை விளக்கமறியலில்

September 12, 2026
மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான மொட்டு கட்சிக் கூட்டத்தில் அர்ச்சுனா எம்.பி. பங்கேற்பு!
செய்திகள்

மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான மொட்டு கட்சிக் கூட்டத்தில் அர்ச்சுனா எம்.பி. பங்கேற்பு!

September 12, 2026
நல்லூர் தேர் திருவிழாவில் தாலிக்கொடி அறுத்த பெண் கைது!
செய்திகள்

நல்லூர் தேர் திருவிழாவில் தாலிக்கொடி அறுத்த பெண் கைது!

September 12, 2026
விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் புதிய செயலாளராக ரோஷனி திசாநாயக நியமனம்!
செய்திகள்

விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் புதிய செயலாளராக ரோஷனி திசாநாயக நியமனம்!

September 12, 2026
Next Post
மட்டக்களப்பில் போசாக்கிற்கான பல்துறை செயல் திட்டம் நடைமுறைப்படுத்தல் குறித்து கலந்துரையாடல்

மட்டக்களப்பில் போசாக்கிற்கான பல்துறை செயல் திட்டம் நடைமுறைப்படுத்தல் குறித்து கலந்துரையாடல்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு