Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஜீவன் தொண்டமான் பாராளுமன்ற உறுப்புரிமையை துறக்க வேண்டும்; என்.பி .பி எம்பி கலைச்செல்வி

ஜீவன் தொண்டமான் பாராளுமன்ற உறுப்புரிமையை துறக்க வேண்டும்; என்.பி .பி எம்பி கலைச்செல்வி

10 months ago
in அரசியல், செய்திகள்

பெருந்தோட்ட மக்களின் சம்பளத்தை முடிந்தால் குறைந்தபட்சம் 10 ரூபாவில் அதிகரித்துக் காட்டுங்கள் என்று பாராளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் ஜனாதிபதிக்கு சவால் விடுத்தார். தற்போது 400 ரூபாவால் சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளது. ஜீவன் தொண்டமான் இதற்கு என்ன சொல்லப்போகிறார். பதிலளிக்க முடியாவிடின் அவர் பாராளுமன்ற உறுப்புரிமை துறக்க வேண்டும். இதுவரை காலமும் பெருந்தோட்ட மக்களுக்கு எதிராக செயற்பட்ட மலையக பிரதிநிதிகள் அனைவரும் பெருந்தோட்ட மக்களிடம் மன்னிப்புக் கோர வேண்டும் என தேசிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கலைச்செல்வி வலியுறுத்தினார்.

பாராளுமன்றத்தில் நேற்று சனிக்கிழமை நடைபெற்ற 2026 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

ஜனாதிபதியால் சமர்ப்பிக்கப்பட்ட 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் உலக சாதனை படைத்தது. பிரதான சாதனையாளராக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுள்ளார்.அனைத்து இன மக்களையும் உள்ளடக்கிய வகையில் ஜனாதிபதி வரவு – செலவுத் திட்டத்தை சமர்ப்பித்தார்.

பெருந்தோட்ட மக்களின் சம்பளம் மற்றும் வீட்டு உரிமை காணி உரிமை தொடர்பில் ஜனாதிபதி விசேட கவனம் செலுத்தியுள்ளார். 1992 -2021 ஆம் ஆண்டுவரையான காலப்பகுதியில் இரண்டாண்டுகளுக்கு ஒருமுறையே பெருந்தோட்ட மக்களின் சம்பளம் அதிகரிக்கப்பட்டது. பெருந்தோட்ட மக்களின் சம்பளம் மற்றும் உட்கட்டமைப்பு துறை அபிவிருத்திகளுக்காக கடந்த காலங்களில் வரவு – செலவுத் திட்டத்தின் போது நான் வீதியில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளேன்.

இந்த வரவு செலவுத் திட்டத்தில் பெருந்தோட்ட மக்களின் சம்பளம் திகரிக்கப்பட்டுள்ளது. இதற்காக ஜனாதிபதி 5000 மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளார். பெருந்தோட்ட மக்களின் சம்பளத்தை முடிந்தால் குறைந்தபட்சம் 10 ரூபாவில் அதிகரித்துக் காட்டுங்கள் என்று பாராளுமன்ற உறுப்பினர் ஜீவன் தொண்டமான் ஜனாதிபதிக்கு சவால் விடுத்தார்.

வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக பெருந்தோட்ட மக்களின் சம்பளத்தை ஜனாதிபதி 400 ரூபாவினால் அதிகரித்துள்ளார். ஜீவன் தொண்டமான் தற்போது இதற்கு என்ன சொல்லப்போகிறார்.

பதிலளிக்க முடியாவிடின் அவர் தனது பாராளுமன்ற உறுப்புரிமை துறக்க வேண்டும். இதுவரை காலமும் பெருந்தோட்ட மக்களுக்கு எதிராக செயற்பட்ட மலையக பிரதிநிதிகள் அனைவரும் பெருந்தோட்ட மக்களிடம் மன்னிப்புக் கோர வேண்டும் என்றார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

தெஹிவளை கைக்குண்டுத் தாக்குதல்; இரு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் குறித்து ஐ.நா கவலை!
செய்திகள்

தெஹிவளை கைக்குண்டுத் தாக்குதல்; இரு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் குறித்து ஐ.நா கவலை!

September 12, 2026
ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதிகள் அல்ல அவர்கள் தீவிரவாதிகள் !
செய்திகள்

ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதிகள் அல்ல அவர்கள் தீவிரவாதிகள் !

September 12, 2026
கைது செய்யப்பட்ட ஷிரான் பாஸிக்கின் தந்தை விளக்கமறியலில்
செய்திகள்

கைது செய்யப்பட்ட ஷிரான் பாஸிக்கின் தந்தை விளக்கமறியலில்

September 12, 2026
மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான மொட்டு கட்சிக் கூட்டத்தில் அர்ச்சுனா எம்.பி. பங்கேற்பு!
செய்திகள்

மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான மொட்டு கட்சிக் கூட்டத்தில் அர்ச்சுனா எம்.பி. பங்கேற்பு!

September 12, 2026
நல்லூர் தேர் திருவிழாவில் தாலிக்கொடி அறுத்த பெண் கைது!
செய்திகள்

நல்லூர் தேர் திருவிழாவில் தாலிக்கொடி அறுத்த பெண் கைது!

September 12, 2026
விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் புதிய செயலாளராக ரோஷனி திசாநாயக நியமனம்!
செய்திகள்

விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் புதிய செயலாளராக ரோஷனி திசாநாயக நியமனம்!

September 12, 2026
Next Post
அர்ஜுன மகேந்திரனை நாடு கடத்தும் நடவடிக்கை; அறிக்கைக்கு காத்திருக்கும் அரசு

அர்ஜுன மகேந்திரனை நாடு கடத்தும் நடவடிக்கை; அறிக்கைக்கு காத்திருக்கும் அரசு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.