Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
நூதன முறையில் தங்க நகைகள் திருடிய பெண் கையும் களவுமாக கந்தளாயில் கைது

நூதன முறையில் தங்க நகைகள் திருடிய பெண் கையும் களவுமாக கந்தளாயில் கைது

10 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

கந்தளாய் நகரில் உள்ள நகைக்கடை ஒன்றில் நூதன முறையில் தங்க நகைகளைத் திருடிச் சென்றதாகச் சந்தேகிக்கப்படும் பெண் ஒருவர், நேற்று முன்தினம் மீண்டும் அதே பகுதியில் நடமாடியபோது கையும் களவுமாகப் பிடிக்கப்பட்டு, கந்தளாய் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

கடந்த மாதம் 28 ஆம் திகதி கந்தளாய் நகரில் அமைந்துள்ள ஒரு நகைக்கடைக்குள் குறித்த பெண் நுழைந்துள்ளார்.

நகை பார்ப்பது போல கடையுரிமையாளரின் கவனத்தைத் திசை திருப்பிவிட்டு, வாயில் மறைத்து வைத்திருந்த போலி தங்க மோதிரத்தை காட்சிப் பெட்டியில் வைத்துள்ளார். அதேசமயம், பெட்டியில் இருந்த உண்மையான தங்க மோதிரத்தை எடுத்து மறைத்துள்ளார்.

மேலும் ஒரு தங்க மோதிரம் மற்றும் காதுப்பு ஜோடி ஒன்றைத் தேர்ந்தெடுத்து, 2,000 ரூபா முற்பணம் மட்டும் கொடுத்துள்ளார்.

“மீதிப் பணத்துடன் பின்னர் வந்து எடுத்துச் செல்கிறேன், இவற்றை தனியாக வைத்திருங்கள்” என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்றுள்ளார்.

இதேபோல தம்பலகாமம் முள்ளிப்பொத்தானை நகரில் உள்ள நகைக்கடை ஒன்றிலும் இதே தந்திரத்தைக் கையாண்டுள்ளார்.

இந்தக் கொள்ளைச் சம்பவங்களில் 3,95,000 ரூபா பெறுமதியான தங்க நகைகள் திருடப்பட்டுள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பெண் சென்ற பிறகு மோதிரம் குறித்து சந்தேகம் ஏற்பட்ட கடையுரிமையாளர், அதனைப் பரிசோதனை செய்தபோது, அது போலி மோதிரம் என்றும், உண்மையான தங்கம் திருடப்பட்டிருப்பதும் தெரியவந்தது.

இந்நிலையில், நேற்று முன்தினம் அதே பெண் மற்றும் அவருடன் மற்றொரு பெண் கந்தளாய் நகரில் உள்ள வேறொரு நகைக்கடைக்கு அருகில் சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடுவதை பொதுமக்கள் கவனித்துள்ளனர்.

தகவல் கிடைத்த கடையுரிமையாளர் உடனடியாக அங்கு சென்று, பொதுமக்களின் உதவியுடன் குறித்த பெண்ணை மடக்கிப் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளார்.

பொலிஸாரின் ஆரம்ப விசாரணையில், கைது செய்யப்பட்ட இந்த இரண்டு பெண்களும் இதற்கு முன்னரும் பல நகைக்கடை திருட்டு வழக்குகளில் ஈடுபட்டுள்ளவர்கள் எனத் தெரிய வந்துள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் புதிய செயலாளராக ரோஷனி திசாநாயக நியமனம்!
செய்திகள்

விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் புதிய செயலாளராக ரோஷனி திசாநாயக நியமனம்!

September 12, 2026
முல்லைத்தீவில் 77 குடும்பங்களுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்கல்!
செய்திகள்

முல்லைத்தீவில் 77 குடும்பங்களுக்கு குடிநீர் இணைப்புகள் வழங்கல்!

September 12, 2026
ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் ஸ்மார்ட் கீ திருட்டு; இருவர் கைது!
செய்திகள்

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் ஸ்மார்ட் கீ திருட்டு; இருவர் கைது!

September 12, 2026
சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 65 பேர் கைது!
செய்திகள்

சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட 65 பேர் கைது!

September 12, 2026
உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிவு; ஹோர்முஸ் பேச்சுவார்த்தை காரணமா?
செய்திகள்

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிவு; ஹோர்முஸ் பேச்சுவார்த்தை காரணமா?

September 12, 2026
“எந்த அரசியல் கட்சியாலும் அரசை வீழ்த்த முடியாது”; பிமல் ரத்நாயக்க
செய்திகள்

“எந்த அரசியல் கட்சியாலும் அரசை வீழ்த்த முடியாது”; பிமல் ரத்நாயக்க

September 12, 2026
Next Post
ஏறாவூரில் இரு கூரிய வாள்களுடன் பெண் ஒருவர் கைது

ஏறாவூரில் இரு கூரிய வாள்களுடன் பெண் ஒருவர் கைது

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு