நேர்மையான கலாசாரம் – தூய்மையான இலங்கை” தேசிய செயற்திட்டத்தின் மாவட்ட விழிப்புணர்வு நடைபவனி நேற்றைய தினம் (28) நாடெங்கிலும் உள்ள மாவட்ட செயலகங்களில் நடைபெற்றது.
ஜனாதிபதி அலுவலகத்தினால் வெளியிடப்பட்ட சுற்றறிக்கை மற்றும் அறிவுறுத்தல்களுக்கு அமைவாக நாடளாவிய ரீதியில் 27ஆம் திகதி முதல் “தேசியநேர்மை வாரம்” ஆக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் காணப்படும் சகல அரச திணைக்களங்களில் கடமையாற்றும் அரச உத்தியோகத்தர்களின் தூய்மையான அரச சேவை குறித்த விழிப்புணர்வை பொதுமக்களுக்கு வழங்கும் நோக்கில் “தேசிய நேர்மை நடைபவனி மாவட்ட பிரதான நிகழ்வு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி சுதர்சினி ஸ்ரீகாந்த் தலைமையில் மட்டக்களப்பில் இடம்பெற்றது.
































மட்டக்களப்பு அரசடி தேவநாயகம் மண்டபத்திலிருந்து ஆரம்பமாகி நகரின் முக்கிய வீதி வழியாக காந்தி பூங்கா வரை விழிப்புணர்வு நடைபவனி முன்னெடுக்கப்பட்டது. கிளீன் ஸ்ரீலங்கா வேலை திட்டத்தின் மூலம் முன்னெடுக்கப்படும் இந்த விழிப்புணர்வு நடைபவனியில் நிகழ்ச்சி திட்டத்தின் நோக்கங்களை வெளிப்படுத்தும் வகையிலான பதாகைகளை ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் ஏந்திச்சென்றனர்.
இதன்போது நிகழ்வின் இறுதியில் நேர்மை வாரத்தின் முக்கியத்துவம் பற்றி அரசு ஊழியர்களுக்கான விழிப்புணர்வு நாடகம் ஒன்று இங்கு நடைபெற்றது.
இந்த நிகழ்வில் திணைக்கள உயர் அதிகாரிகள் மட்டக்களப்பு பொலிஸ் ராணுவ உயர் அதிகாரிகள் மாவட்ட செயலக உயர் அதிகாரிகள்,மாவட்டத்தின் சகல பிரதேச செயலக உயர் அதிகாரிகள் ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.








