இலங்கை முஸ்லிம்களின் ஆன்மீக – பொருளாதார முன்னேற்றத்தில் இந்திய முஸ்லிம்களின் பங்களிப்பு குறித்து தமிழக அரசு உத்தியோகபூர்வ ஆய்வு செய்து வெளியீடு செய்ய வேண்டும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் கோரிக்கை வைத்துள்ளார்.
திருச்சி டோல் கேட்டில் உள்ள அரசினர் விருந்தினர் இல்லத்தில் 10.11.2025 திங்கள்கிழமை காலை ரவூப் ஹக்கீம் மற்றும் ஊடகவியலாளர் எம்.கே. ஷாகுல் ஹமீது தமிழ்நாடு முதலமைச்சரை சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.
அப்போது ஹக்கீம்,
- இலங்கை – தமிழ் அகதிகளுக்கான தமிழகத்தின் திட்டத்திற்கு நன்றி
- இந்திய, இலங்கை மீனவர் பிரச்சனைக்கு இருதரப்பு கூட்டுறவு அமைப்பு உருவாக்க உதவி
- தமிழ்நாடு – இலங்கை முஸ்லீம் ஆன்மீக – பண்பாட்டு – பொருளாதார இணைப்பு ஆய்வு செய்ய வேண்டும்
- மலையக இந்து கோயில் கட்டுமானத்திற்கு தமிழக சிற்பிகள் உதவி அனுப்ப தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்
என பல கோரிக்கைகளை முன்வைத்தார்.
அனைத்தையும் பரிசீலிப்பதாக முதல்வர் ஸ்டாலின் உறுதி தெரிவித்ததாக ரவூப் ஹக்கீம் கூறினார்.








