Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
முல்லைத்தீவில் கடலிலே காவியமான மற்றும் கரையோர மாவீரர்களை நினைவு கூர்ந்து அஞ்சலி

முல்லைத்தீவில் கடலிலே காவியமான மற்றும் கரையோர மாவீரர்களை நினைவு கூர்ந்து அஞ்சலி

10 months ago
in செய்திகள்

முல்லைத்தீவு கடற்கரையில் கடலிலே காவியமான மற்றும் கரையோர மாவீரர்களினை நினைவு கூர்ந்து பூ தூவி அஞ்சலி செலுத்தி மாவீரர் எழுச்சி நாளினை கரையோர மாவீரர் நாள் அமைப்பினரால் நேற்றையதினம் (10) ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

இதன் போது கரைதுறைப்பற்று பிரதேச சபையின் உறுப்பினர்களான தொ.பவுள்ராஜ், ம.குணசிங்கராஜா மற்றும் மாவீரர்களின் உரித்துடையோர்கள், கரையோர மாவீரர் நாள் அமைப்பினர் , பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டு அஞ்சலியினை செலுத்தியிருந்தனர்.

அஞ்சலி செலுத்தியதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது, 2025 ஆம் ஆண்டுக்குரிய மாவீரர் தினம் கடலிலே காவியமான மற்றும் கரையோர மாவீரர்களினை நினைவு கூர்ந்து பூ தூவி உத்தியோக பூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

பல வருடங்களாக இப்பகுதியில் மாவீரர்களை நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்தி வரப்பட்டதாகவும், தற்போது கரைதுறைப்பற்று பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட சுற்றுலா தளமாக மாற்றமடைந்துள்ளதனால் பிரதேச சபையின் தபிசாளர், செயலாளர் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்களுக்கு அனுமதி கடிதத்தையும் வழங்கியிருப்பதாகவும் ஏற்கனவே கடந்த மாதம் அனுமதி கடிதத்தை பிரதேச சபையின் தபிசாளரிடமும் வழங்கியிருந்தோம்.

ஏற்பாட்டு குழு எனும் வடிவில் இருந்த அமைப்பானது தற்போது கரையோர மாவீரர் நாள் அமைப்பு என பெரும் திரளான மக்களுடன் கூட்டம் கூடி ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கார்த்திகை மாதம் என்றால் மாவீரர்களுக்குரிய காலமாகும் அதனால் மாவீரர்களுக்குரிய அனைத்து செயற்பாடுகளையும் தூய்மையான மனதோடு செய்ய வேண்டும் அந்தவகையிலே கடலிலே காவியமான மற்றும் கரையோர மாவீரர்களினை நினைவு கூர்ந்து பூ தூவி ஆரம்பித்து வைத்திருக்கின்றோம்.

அதனை தொடர்ந்து ஏனைய பகுதிகளில் எழுச்சி கொடிகளை கட்டி ஆரம்பிக்க இருப்பதாகவும், மாவீரர்களை நினைவு கூர்வதற்கு கட்சிகள் தலையிட கூடாது கட்சி பேதங்களை கடந்து அனைவரும் அணிதிரண்டு வருகைதந்து மாவீரர்களின் கனவுகளை நனவாக்க வேண்டும் என மேலும் தெரிவித்தனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்களை கண்டறியும் சோதனை தீவிரம்!
செய்திகள்

மதுபோதையில் வாகனம் செலுத்துபவர்களை கண்டறியும் சோதனை தீவிரம்!

September 15, 2026
மயிலத்தமடு,மாதவனை கால்நடை பண்ணையாளர்கள் சித்தாண்டியில் தீப்பந்தத்தினை எரித்து போராட்டம்
காணொளிகள்

மயிலத்தமடு,மாதவனை கால்நடை பண்ணையாளர்கள் சித்தாண்டியில் தீப்பந்தத்தினை எரித்து போராட்டம்

September 15, 2026
கொழும்பு தேசிய வைத்தியசாலை பணிப்பாளருக்கு நீதிமன்ற அழைப்பாணை
செய்திகள்

கொழும்பு தேசிய வைத்தியசாலை பணிப்பாளருக்கு நீதிமன்ற அழைப்பாணை

September 15, 2026
மட்டக்களப்பு வின்சென்ட் மகளிர் உயர்தரப் பாடசாலைக்கு புதிய அதிபர் நியமனம்!
செய்திகள்

மட்டக்களப்பு வின்சென்ட் மகளிர் உயர்தரப் பாடசாலைக்கு புதிய அதிபர் நியமனம்!

September 15, 2026
அர்ச்சுனா இராமநாதனின் ஒத்துழைப்புடன் வடகிழக்கில் அரசியல் அதிகாரம் கைப்பற்றப்படும்; மொட்டு
செய்திகள்

அர்ச்சுனா இராமநாதனின் ஒத்துழைப்புடன் வடகிழக்கில் அரசியல் அதிகாரம் கைப்பற்றப்படும்; மொட்டு

September 15, 2026
காதலி இலங்கையில்..காதலன் இந்தியாவில்!; பேஸ்புக் காதலுக்காக கடல் கடந்த 17 வயது சிறுவன் மன்னாரில் கைது!
செய்திகள்

காதலி இலங்கையில்..காதலன் இந்தியாவில்!; பேஸ்புக் காதலுக்காக கடல் கடந்த 17 வயது சிறுவன் மன்னாரில் கைது!

September 15, 2026
Next Post
வடக்கு மாகாண தாதியர் உத்தியோகத்தர் சங்கம் நாளை 24 மணிநேர அடையாள வேலைநிறுத்தம்

வடக்கு மாகாண தாதியர் உத்தியோகத்தர் சங்கம் நாளை 24 மணிநேர அடையாள வேலைநிறுத்தம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு