Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்த நம்பிக்கை தரும் கருத்துக்கள் வரவுசெலவுத்திட்ட உரையில் இல்லை; எம்.பி. துரைராசா ரவிகரன்

தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்த நம்பிக்கை தரும் கருத்துக்கள் வரவுசெலவுத்திட்ட உரையில் இல்லை; எம்.பி. துரைராசா ரவிகரன்

11 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் அரசியல் தீர்வு மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம், தமிழ் அரசியல் கைதிகளின் விடுவிப்பு உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவின் 2026ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத்திட்ட உரையில் நம்பிக்கை தருகின்ற விதமான கருத்துக்கள் எவையும் உள்ளடக்கப்படவில்லை என வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேவேளை இந்த வரவுசெலவுத் திட்டத்தில் வடக்கு கிழக்கிலுள்ள தொழிற்சாலைகள் தொடர்பிலும் கவனஞ்செலுத்தப்படவில்லை எனத் தெரிவித்து, வடக்கு, கிழக்கு தமிழ் மக்களையும் இந்த அரசாங்கம் அணைத்துக்கொண்டு செயற்பட வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றில் இன்று (11) 2026 ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத் திட்ட இராண்டாம் மதிப்பீட்டு விவாதத்தில் பங்கேற்று கருத்துத் தெரிவிக்கும்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைப் பொறுத்தவரையில் பல தொழிற்சாலைகள் இயங்காத நிலையில் காணப்படுகின்றன. குறிப்பாக ஒட்டுசுட்டான் ஓட்டுத்தொழிற்சாலை, காங்கேசன்துறை சீமெந்துத் தொழிற்சாலை, பரந்தன் இரசாயனத் தொழிற்சாலை, வாழைச்சேனை காகிதத் தொழிற்சாலை ஆகிய இவ்வாறான தொழிற்சாலைகளை மீள இயங்கச்செய்வது குறித்து கவனஞ்செலுத்துங்கள். புறக்கணிக்க வேண்டாமெனக் கேட்டுக்கொள்ள விரும்புகின்றேன்.

அத்தோடு ஜனாதிபதியவர்களின் 2026ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத்திட்ட உரையில் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு விடயத்திலும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் விடயத்திலும், அரசியல் கைதிகள் விடயத்திலும் நம்பிக்கை தரும் விதமான கருத்துக்கள் எவையும் உள்ளடக்கப்படவில்லை. வடக்கு மற்றும் கிழக்கிலுள்ள தமிழ் மக்களையும் அணைத்துக்கொண்டு செயற்படுமாறு கேட்டுக்கொள்கின்றேன். என குறிப்பிட்டுள்ளார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

இலங்கையின் ஏற்றுமதி வருவாய் 12 பில்லியன் டொலரைக் கடந்தது!
செய்திகள்

இலங்கையின் ஏற்றுமதி வருவாய் 12 பில்லியன் டொலரைக் கடந்தது!

September 23, 2026
நஷ்டத்தில் எரிபொருள் விற்பனை; தீர்வைத் தேடும் அரசாங்கம்! 
செய்திகள்

நஷ்டத்தில் எரிபொருள் விற்பனை; தீர்வைத் தேடும் அரசாங்கம்! 

September 23, 2026
பாதுகாப்பு படைகளின் தலைமை அதிகாரி (நீக்குதல்) சட்டமாக அமுலுக்கு வருகிறது!
செய்திகள்

பாதுகாப்பு படைகளின் தலைமை அதிகாரி (நீக்குதல்) சட்டமாக அமுலுக்கு வருகிறது!

September 23, 2026
செப்டம்பர் மாதம் 30 ஆம் திகதி வரை நாமல் மீண்டும் விளக்கமறியலில்
செய்திகள்

செப்டம்பர் மாதம் 30 ஆம் திகதி வரை நாமல் மீண்டும் விளக்கமறியலில்

September 23, 2026
கொக்குத்தொடுவாய் சட்டவிரோத உப்பளத்தை நிறுத்த தீர்மானம்!
செய்திகள்

கொக்குத்தொடுவாய் சட்டவிரோத உப்பளத்தை நிறுத்த தீர்மானம்!

September 23, 2026
வரி வருவாயை வலுப்படுத்த புதிய இடைக்கால மூலோபாயம் அவசியம்; IMF
செய்திகள்

வரி வருவாயை வலுப்படுத்த புதிய இடைக்கால மூலோபாயம் அவசியம்; IMF

September 23, 2026
Next Post
2026 வரவு செலவுத் திட்டம் குறித்து ஃபிட்ச் ரேட்டிங்ஸ் நிறுவனம் வெளியிட்ட அறிக்கை

2026 வரவு செலவுத் திட்டம் குறித்து ஃபிட்ச் ரேட்டிங்ஸ் நிறுவனம் வெளியிட்ட அறிக்கை

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு