யாழ்ப்பாணம் தென்மராட்சி – கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட உசன் சந்தியில் இன்று (11.11.2025) மாலை சுமார் 5.45 மணியளவில் விபத்து ஒன்று இடம்பெற்றது.
அரசுப் பேருந்தின் பின்பகுதியில் முச்சக்கரவண்டி ஒன்று மோதியதிலேயே இவ்விபத்து ஏற்பட்டதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

விபத்தில் ஈடுபட்ட இரு வாகனங்களும் சேதமடைந்துள்ளன. எனினும் அதிர்ஷ்டவசமாக எவருக்கும் உயிரிழப்பு ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகள் கொடிகாமம் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.








