யாழ்ப்பாணத்தில் பிறந்த இரட்டைக் குழந்தைகளில் பெண் குழந்தை ஏற்கனவே உயிரிழந்த நிலையில் ஆண் குழந்தையும் இன்று (20) உயிரிழந்துள்ளது.
இளவாலை பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவருக்கு கடந்த 9 மாதங்களுக்கு முன்னர் இரட்டைக் குழந்தைகள் பிறந்துள்ளன. அதில் பெண் குழந்தை கடந்த ஏப்ரல் மாதம் உயிரிழந்துள்ளது.
இந்நிலையில், ஆண் குழந்தைக்கு இன்று அதிகாலை திடீரென வாந்தி ஏற்பட்டதையடுத்து குழந்தை மயக்கமடைந்துள்ளது.

உடனடியாக குழந்தை சங்கானை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும் குழந்தை ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
குழந்தையின் சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி மேற்கொண்டுள்ளார்.
குழந்தையின் மரணத்துக்கான காரணம் சரிவர அறியப்படாத நிலையில், உடற்கூற்று மாதிரிகள் மேலதிக பரிசோதனைகளுக்காக கொழும்புக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளன.








