Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பூஸா சிறைச்சாலையிலிருந்து இயங்கும் போதைப்பொருள் வலையமைப்பு அம்பலம்

பூஸா சிறைச்சாலையிலிருந்து இயங்கும் போதைப்பொருள் வலையமைப்பு அம்பலம்

9 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

பூஸா அதிஉயர் பாதுகாப்புச் சிறைச்சாலையில் இருந்து வழிநடத்தப்பட்ட போதைப்பொருள் கடத்தல் வலையமைப்பு பற்றிய தகவல்களைக் கிரிபத்கொட காவல்துறை அம்பலப்படுத்தியுள்ளது.

காவல்துறையினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், கிரிபத்கொடவிலுள்ள ஓர் உணவகத்தில் ஹெரோயின் வைத்திருந்த ஒரு தம்பதியினர் கைது செய்யப்பட்டனர்.

இந்தக் கைது விசாரணைகளின் மூலம், சிறைச்சாலையில் உள்ள அமல் ராஜ் என்பவரே தொலைபேசி மூலம் இந்த போதைப்பொருள் கடத்தலை இயக்கி வருகிறார் என்பது தெரியவந்தது.

அமல் ராஜ், வட்ஸ்அப் (WhatsApp) மூலமாகத் தனது சகாக்களுடன் தொடர்பில் இருந்துள்ளதை காவல்துறை கண்டுபிடித்தது.

இதனையடுத்து, கைது செய்யப்பட்ட அந்தப் பெண்ணைக் கொண்டே அமல் ராஜுக்குத் தொலைபேசியில் அழைப்பு ஏற்படுத்தப்பட்டது.

அப்போது, “பெரிய சரக்கில் 25 கிராம் வேண்டும்” என்று அந்தப் பெண் கேட்டபோது, கொட்டாஞ்சேனை பகுதிக்கு வந்து மீண்டும் அழைக்குமாறு அமல் ராஜ் அறிவுறுத்தியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, உளவுத்துறை அதிகாரி ஒருவர் அந்தத் தம்பதியினரையும் முச்சக்கர வண்டியில் அழைத்துக் கொண்டு கொட்டாஞ்சேனைக்கு சென்றுள்ளார்.

அங்கு வைத்து மீண்டும் அமல் ராஜைத் தொடர்பு கொண்டபோது, அவர்கள் தங்கியிருக்கும் இடம் மற்றும் முச்சக்கர வண்டி ஆகியவற்றின் புகைப்படங்களை வட்ஸ்அப்பில் அனுப்புமாறு அமல் ராஜ் கோரியுள்ளார்.

அந்தப் புகைப்படங்களை அனுப்பிய பின்னர், அந்த இடத்திற்கு வந்த நபர் ஒருவர், குறித்த போதைப்பொருளை உளவுத்துறை அதிகாரியிடம் ஒப்படைத்துள்ளார். அதன்போது விரைந்து செயற்பட்ட காவல்துறை, அந்த ஹெரோயினுடன் சம்பந்தப்பட்ட நபரை உடனடியாகக் கைது செய்தது.

ஸ்டீவன் ராஜ் என அடையாளம் காணப்பட்ட அந்தக் நபரிடம் மேற்கொண்ட மேலதிக விசாரணைகளில், அவர் ஆட்டுப்பட்டித்தெரு பகுதியில் வாடகைக்குத் தங்கியிருந்த இடத்தில் இருந்து, 600 கிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் 5,400 வெளிநாட்டு சிகரெட்டுகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

அதே வீட்டில் இருந்து 68,000 ரூபாய் ரொக்கப் பணம் மற்றும் சில நாட்களுக்கு முன்னர் 4 இலட்சம் ரூபாய் வைப்பிலிடப்பட்டதற்கான பற்றுச்சீட்டுகளையும் காவல்துறை கைப்பற்றியுள்ளது.

இந்தக் கடத்தலில் ஈடுபட்ட மற்றுமொரு நபர் தலைமறைவாகியுள்ளதாகவும், அவரைத் தேடும் நடவடிக்கைகளுடன் மேலதிக விசாரணைகளும் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

Tags: BatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

மட்டக்களப்பு மாநகர சபையின் 16 சுகாதாரத் தொண்டர் நியமனங்கள் குறித்து விசாரணை கோரி ஆளுநரிடம் மனு
செய்திகள்

மட்டக்களப்பு மாநகர சபையின் 16 சுகாதாரத் தொண்டர் நியமனங்கள் குறித்து விசாரணை கோரி ஆளுநரிடம் மனு

August 10, 2026
பாணதுறையில் 810 போதை மாத்திரைகளுடன் இளைஞன் கைது!
செய்திகள்

பாணதுறையில் 810 போதை மாத்திரைகளுடன் இளைஞன் கைது!

August 10, 2026
ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள் ஒரு மாதத்திற்குள் வெளியீடு!
செய்திகள்

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள் ஒரு மாதத்திற்குள் வெளியீடு!

August 10, 2026
அம்பாறையில் பாரிய சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையம் முற்றுகை; இருவர் கைது!
செய்திகள்

அம்பாறையில் பாரிய சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையம் முற்றுகை; இருவர் கைது!

August 10, 2026
துணுக்காய் – முல்லைத்தீவு அரச பேருந்து சேவை மீண்டும் ஆரம்பம்!
செய்திகள்

துணுக்காய் – முல்லைத்தீவு அரச பேருந்து சேவை மீண்டும் ஆரம்பம்!

August 10, 2026
ஊழல் குற்றச்சாட்டில் தகவல் வழங்குவோருக்கு வழக்கிலிருந்து விலக்கு; புதிய சட்டத் திருத்தம்!
செய்திகள்

ஊழல் குற்றச்சாட்டில் தகவல் வழங்குவோருக்கு வழக்கிலிருந்து விலக்கு; புதிய சட்டத் திருத்தம்!

August 10, 2026
Next Post
‘டிரம்ப் பாசிஸ்ட்டா?’ – மம்தானியிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த டிரம்ப்

'டிரம்ப் பாசிஸ்ட்டா?' - மம்தானியிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்த டிரம்ப்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.