அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், நியூயார்க் நகரத்தின் புதிய மேயராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஸோரான் மம்தானியை சந்தித்து, அவரைப் பாராட்டியுள்ளார்.
அரசியல் ரீதியில் பல முறை மோதிக் கொண்ட இருவரும் நவம்பர் 21 அன்று வெள்ளை மாளிகையில் நேரடியாக கலந்துரையாடினர்.
அப்போது நிருபர் ஒருவர் மம்தானியிடம், “அதிபர் டிரம்ப் ஒரு ஃபாசிஸ்ட் (fascist) என்று உறுதியாக நினைக்கிறீர்களா?” என்று கேட்டார். மம்தானி பதிலளிப்பதற்கு முன்பாகவே அதிபர் டொனால்ட் டிரம்ப் அதற்கு ஆம் பதிலளித்தார். தற்போது இந்த காணொளி பெரிதும் வைரலாகி வருகிறது.








