சர்வதேச நாணய நிதியத்தின் (ஐஎம்எப்) ஒப்பந்தத்துக்கமைய நாம் செயற்படும்போது மிகக் கடுமையான பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும் என்று பாராளுமன்ற உறுப்பினர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
அதேவேளை, அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாயின் பெறுமதி அதிகரித்துள்ளதால் எரிபொருட்களின் விலைகள் மற்றும் மின்சார கட்டணங்கள் கணிசமான விகிதத்தில் குறைக்கப்படலாம் என்றும் குறிப்பிட்டார்.
இலங்கை கடனைத் திருப்பிச் செலுத்தத் தவறியதாலும், இறக்குமதிக்கான கட்டுப்பாடுகள் மற்றும் எரிபொருள் நுகர்வு குறைக்கப்பட்டதாலும் அமெரிக்க டொலருக்கான தேவை குறைந்துள்ளதால் ரூபாய்க்கு எதிராக அமெரிக்க டொலரின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளதாக சுட்டிக்காட்டினார். வெளிநாடுகளில் இருந்து பெறப்பட்ட கடன்களை இலங்கை செலுத்த ஆரம்பித்து, இறக்குமதி கட்டுப்பாடுகளை இரத்து செய்து இறக்குமதியை அனுமதித்தால் டொலர் மீண்டும் உயரும் என்றும் குறிப்பிட்டார்.