மாவிலாறு அணைக்கட்டு உடைப்பெடுத்ததன் காரணமாக வெள்ளத்தில் பாதிக்கப்பட்டு கதிரவெளி விக்னேஸ்வரா கனிஷ்ட வித்தியாலய இடைத்தங்கல் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள கல்லரிப்பு மக்களை இலங்கை தமிழரசு கட்சியினனை பிரதிநிதிப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களாக எம் ஏ சுமந்திரன் இரா சாணக்கியன் ஆகியோர்கள் நேரில் சென்று பார்வையிட்டனர்.
அவர்களது வாழ்வாதாரம் தொடர்பான குறை நிறைகளை கேட்டறிந்து கொண்டனர். இவர்களுக்கு உரிய அடிப்படை வசதிகள் மற்றும் வெள்ளப் பாதிப்பு உலர் உணவு வழங்கல் போன்ற விடயங்கள் தொடர்பாக அவர்களுடன் கலந்துரையாடலை மேற்கொண்டனர்.
இதேவேளை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களான கல்லரிப்பு, கதிரவெளி, வெருகல்,மாவடிச்சேனை, போன்ற இடங்களுக்கும் சென்று வெள்ள பாதிப்பு தொடர்பான காள நிலவரங்களை பார்வையிட்டு அறிந்து கொண்டனர்.
பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரண உதவிகள் மற்றும் மீள் குடியேற்றம் என்பன தொடர்பாக அரசாங்க அதிபர் மற்றும் சம்பந்தப்பட்ட அமைச்சரின் கவனத்திற்கு தெரியப்படுத்துவதாகவும் இதன் போது கருத்து தெரிவித்தனர்.













