Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
உயிரிழந்த மக்களுக்கு அஞ்சலி; மலையக மக்களை நோக்கி செல்லவுள்ள நிவாரண உதவிகள்!

உயிரிழந்த மக்களுக்கு அஞ்சலி; மலையக மக்களை நோக்கி செல்லவுள்ள நிவாரண உதவிகள்!

8 months ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

வரலாற்றில் மிக மோசமான இயற்கை அழிவை சந்தித்துள்ள இலங்கையில் உள்ள மலையக மக்களுக்கான நிவாரணம் சேகரிக்கும் பணி நிறைவடைந்ததோடு இலங்கையில் இயற்கை அனர்த்ததினால் உயிரிழந்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வும் நடைபெறுகிறது.

ஏறாவூர் பற்று பிரதேச சபையின் தலைமையில் ஏறாவூர் பற்று வர்த்தக சங்கமும் இணைந்து இலங்கையில் ஏற்பட்ட சூறாவளி, மண்சரிவு மற்றும் மழை வெள்ளம் காரணமாக மிக மோசமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி கரம் நீட்டும் வகையில்நிவாரணம் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

கடந்த மூன்று நாட்களாக மேற்கொள்ளப்பட்ட நிவாரணம் சேகரிக்கும் பணியில் இன,மத பேதங்களை கடந்து ஏழை பணக்காரன் என்று பாராமல் ஏறாவூர் பற்று பிரதேசத்தில் உள்ள அனைவரும், புலம்பெயர் தேசத்தில் உள்ள உறவுகளும் நிவாரண உதவிகளை வழங்கி இருந்தனர்.

நிவாரண சேகரிக்கும் பணியை நிறைவு செய்த ஏறாவூர் பற்று பிரதேச சபை உறுப்பினர்கள், உத்தியோகத்தர்கள், வர்த்தக சங்கத்தினர், வர்த்தகர்கள் பொது மக்கள் என அனைவரும் இணைந்து இலங்கையில் ஏற்பட்ட அனர்த்ததினால் உயிரிழந்த உறவுகளுக்கு விளக்கேற்றி அஞ்சலி செலுத்தினர்.

மேற்படி அஞ்சலி நிகழ்வில் சிரேஸ்ட ஊடகவியலாளரும் ஏறாவூர் பற்று பிரதேச சபை உறுப்பினருமான செ.நிலாந்தன் அஞ்சலி உரை நிகழ்த்தியதோடு ஏறாவூர் பற்று பிரதேச சபை சார்பாக நிவாரணம் சேகரிக்கும் பணியில் இணைந்து அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்ததோடு, நிவாரணங்களை இன் மத பேதங்கள் இன்றி முன் வந்து வழங்கிய அனைவருக்கு நன்றிகளை தெரிவித்தார்.

ஏறாவூர் பற்று பிரதேச சபை உறுப்பினர் உதயராஜ், ஏறாவூர் பற்று வர்த்தக சங்க தலைவர், ஜெகன், செயலாளர் டினேஸ் ஆகியோர் நிவாரணம் சேகரிக்கும் பணியில் இணைந்து கொண்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்தனர்.

தொடர்புடையசெய்திகள்

நிலவில் மோதவுள்ள ஸ்பேஸ்எக்ஸ் ராக்கெட் பாகம்; 17 மீட்டர் பள்ளம் உருவாகும் என தகவல்!
செய்திகள்

நிலவில் மோதவுள்ள ஸ்பேஸ்எக்ஸ் ராக்கெட் பாகம்; 17 மீட்டர் பள்ளம் உருவாகும் என தகவல்!

August 5, 2026
அகில விராஜ் காரியவசம் கைது!
செய்திகள்

அகில விராஜ் காரியவசம் கைது!

August 5, 2026
நாளை முதல் மழை தீவிரம்; சில பகுதிகளுக்கு 100 மி.மீ.க்கு மேல் கனமழை எச்சரிக்கை!
செய்திகள்

நாளை முதல் மழை தீவிரம்; சில பகுதிகளுக்கு 100 மி.மீ.க்கு மேல் கனமழை எச்சரிக்கை!

August 5, 2026
வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.66 இலட்சத்துக்கும் அதிகமான பணம் மோசடி; இளைஞர் கைது!
செய்திகள்

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.66 இலட்சத்துக்கும் அதிகமான பணம் மோசடி; இளைஞர் கைது!

August 5, 2026
துபாயில் வினோதம்; செயற்கை நுண்ணறிவு மனித ரோபோவுக்கு திருமணம்!
செய்திகள்

துபாயில் வினோதம்; செயற்கை நுண்ணறிவு மனித ரோபோவுக்கு திருமணம்!

August 5, 2026
உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்கக் கோரிய மனு விசாரணையின்றி தள்ளுபடி!
செய்திகள்

உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்கக் கோரிய மனு விசாரணையின்றி தள்ளுபடி!

August 5, 2026
Next Post
இறந்த மீன்களை உண்ணவேண்டாம்; உலக சுகாதார நிறுவனம்

இறந்த மீன்களை உண்ணவேண்டாம்; உலக சுகாதார நிறுவனம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு