மட்டக்களப்பு-பொலன்னறுவை பிரதானசாலையில் இன்று (08) காலை 11 மணியளவில் துப்பாக்கிகள் மீட்கப்பட்டுள்ளன.
கொழும்பிலிருந்து வந்த மத்திய ஊழல் தடுப்புப் பிரிவின் குழுவினரால் இது மீட்டப்பட்டுள்ளது.
ஒரு தொலைபேசி கம்பத்திற்கு அருகே மளிகைப் பையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 01 மைக்ரோ பிஸ்டல் மற்றும் அதற்கான மெகசின், மேலும் இத்தாலியில் தயாரிக்கப்பட்ட ஒரு ரிவால்வர் வகை துப்பாக்கி என்பன இதன்போது மீட்கப்பட்டுள்ளன.
இந்த சம்பவத்தில் சந்தேக நபர்கள் யாரும் கைது செய்யப்படவில்லை என்பதுடன் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.








