Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இலங்கையில் தற்கொலை செய்பவர்களில் ஆண்களே அதிகம்!

இலங்கையில் தற்கொலை செய்பவர்களில் ஆண்களே அதிகம்!

3 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

இலங்கையில் நாள்தோறும்9பேர் அளவில் தற்கொலை செய்துகொள்வதாக பேராதனை பல்கலைக்கழக ஆய்வொன்றில் மூலம் தெரியவந்துள்ளது. இதன் அடிப்படையில், மூன்று வருட காலத்தில் 9,700பேர் தற்
கொலை செய்துகொண்டுள்ள தாகவும் தகவல் கிடைத்துள்ளது. தற்கொலை செய்துள்ளவர்களில்,

  • 83 வீதமானவர்கள் ஆண்கள்
  • 35 வீதமானவர்கள் வேலையில்லாதவர்கள்
  • கடந்த வருடத்தில் மாத்திரம் 3,406 பேர் தற்கொலை
  • நாளொன்றுக்கு 9 பேர் தற்கொலை! இவ்வாறு தற்கொலை செய்து கொள்பவர்களில் 40 விகிதமானவர்கள் கல்வி கற்பவர்கள் எனவும் அவர்களுள் 22 பேர் பட்டப்படிப்பை தொடர்பவர்கள்எனவும் குறித்த ஆய்வு சுட்டிக்காட்டியுள்ளது.மேலும், நாட்டில் பல்வேறுகாரணங்களால் தற்கொலை செய்து கொள்வோர் தொடர்பாக செய்திகள் அண்மையநாட்களில் அதிகளவில்பதிவாகியுள்ளன.

தனிநபர்கள் தற்கொலை செய்து கொள்வதுடன் சில சந்தர்ப்பங்களில் குடும்பமாகவும்தற்கொலை செய்து கொள்ளும் சந்தர்ப்பங்களும் அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில், தற்கொலை செய்து கொள்வதற்கான காரணங்களாக தொழிலின்மை,
பொருளாதார நெருக்கடி என்பன பிரதான காரணம் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. மேலும், கல்வி கற்கும் மாணவர்களை பொருத்தமட்டில் அதிகளவான மனஅலுத்தத்திற்கு ஆளாவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்கொலை செய்து கொண்டோரில் 83 வீதமானவர்கள் ஆண்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது. அதில் 35வீதமானோர்வேலையற்றவர்கள் எனவும்தெரிவிக்கப்பட்டுள்ளது.கடந்த 3 வருடங்களில் மாத்திரம் 9,700 தற்கொலை சம்பவங்கள் பதிவாகியுள்ளன. அந்த எண்ணிக்கை அதற்கு முன்னைய வருத்துடன் ஒப்பிடும் போது 10 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாகவும் கூறப்படுகின்றது.மேலும், தற்கொலை செய்து கொண்டவர்களில் 17 வீதமானபெண்களும் உள்ளடங்குகின்றனர்.

இதில் சிறுவயது பாடசாலை கல்வி கற்கும் மாணவிகள், பல்கலை மாணவிகள் 10விகிதம் காணப்படுகின்றனர்.தற்கொலை செய்துகொண்டவர்கள் கல்வி கற்ற தரப்பினர் என்பதுடன் உயிரிழந்தவர்களில் 40 வீதமானவர்கள் சாதாரண தரத்தில் சித்தி அடைந்து உயர் தரத்தில் கல்வி கற்றவர்களாவர். தொழில் செய்வோர்களில் விவசாயத்தில் ஈடுபடும் தரப்பினர் இந்த தற்கொலை முயற்சிகளில் அதிகம் ஈடுபட்டுள்ளனர்.மேலும் இலங்கையை பொறுத்தமட்டில் 4 மணித்தியாலங்களுக்கு ஒருவர் என்ற அடிப்படையில் நாளொன்றுக்கு 9 பேர் தற்கொலை செய்து கொள்கின்றனர்.

எதிர்காலத்தில் நாட்டின் பொருளாதார நெருக்கடிஉள்ளிட்ட காரணங்களை அடிப்படையாக கொண்டு தற்கொலைஎண்ணிக்கை அதிகரிக்கலாம்என்றார். இதேவேளை இது தொடர்பில் மனநல விசேட வைத்திய
நிபுணர் ரூமி ரூபன் கருத்துதெரிவிக்கையில்,பொருளாதார நெருக்கடிகள்ம் காரணமாகவே அதிகளவிலான
தற்கொலை சம்பவங்கள் இடம் பெறுகின்றன.இவ்வாறு செய்வது சட்டப்படி குற்றம் என்றாலும் சட்டங்களை நடைமுறைப்படுத்துவதைவிடுத்து தற்கொலை முயற்சியில் ஈடுபடும் தரப்பினரை
அடையாளம் கண்டு அவர்கள்தொடர்பில் மிகுந்த அவதானம் செலுத்த வேண்டும்.

இதன் மூலமாகவே இந்த மரணங்களை தடுக்க முடியும்.ஒருவர் மன ரீதியாக பாதிக்கப்பட்ட நிலையில் அவர் மனநோயாளர் என அடையாளம் காணப்படாமையே இந்த நிலைக்கு மற்றுமொரு காரணமாகும்.
பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு முறையாக சிகிச்சை வழங்கப்படாமையும் இதற்கு காரணமாக அமைய முடியும்.

ஒருவர் பொருளாதார ரீதியாக அல்லது மன ரீதியாகபாதிக்கப்பட்டுள்ள நிலையில்தான் தற்கொலை செய்து கொள்ளபோவதாக கூறும் போது பலர் இதனை கருத்திக்கொள்வதில்லை.அவர்கள் கூறும் விடயங்கள்
புறக்கணிக்கப்படுகின்றன. தற்கொலை செய்ய போவதாக கூறும் ஒருவருக்கும் நாம் உதவி
களை செய்வதில்லை. பிரச்சனைகளுக்கு எவ்வாறு தீர்வு காண்பது? மன அழுத்தத்தை எவ்வாறு இல்லாமல்
செய்வது போன்று நாம் கவனம் செலுத்தும் போது தற்கொலைகள் இடம்பெறுவதை குறைக்க
முடியும்-என்றார். கடந்த வருடத்தில் மாத்திரம்3,406பேர் வரையில் தற்கொலை செய்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடையசெய்திகள்

மக்களின் பாரிய வரிப்பணம் இலங்கையிலிருந்து வெளிநாட்டிற்கு கடத்தப்பட்டது அம்பலமானது
செய்திகள்

மக்களின் பாரிய வரிப்பணம் இலங்கையிலிருந்து வெளிநாட்டிற்கு கடத்தப்பட்டது அம்பலமானது

July 22, 2026
கல்லடி மெதடிஸ்த திருச்சபை வாலிபர்களின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம்
செய்திகள்

கல்லடி மெதடிஸ்த திருச்சபை வாலிபர்களின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம்

July 22, 2026
மட்டக்களப்பில் காணாமல்போனோர் தொடர்பில் விசாரணை
செய்திகள்

மட்டக்களப்பில் காணாமல்போனோர் தொடர்பில் விசாரணை

July 22, 2026
பாடசாலைக்கு ஒழுங்காக செல்லாத மாணவர்கள் கைது
செய்திகள்

பாடசாலைக்கு ஒழுங்காக செல்லாத மாணவர்கள் கைது

July 22, 2026
செம்மணி புதைக்குழி; உண்மைகள் வெளிவர தடையில்லை என்கிறது அரசாங்கம்!
செய்திகள்

செம்மணி புதைக்குழி; உண்மைகள் வெளிவர தடையில்லை என்கிறது அரசாங்கம்!

July 22, 2026
மின்சார வாகன இறக்குமதி அனுமதிப்பத்திர முறையில் முறைகேடு; ராஜபக்ச புதல்வர்கள் தொடர்பில் குற்றச்சாட்டு!
செய்திகள்

மின்சார வாகன இறக்குமதி அனுமதிப்பத்திர முறையில் முறைகேடு; ராஜபக்ச புதல்வர்கள் தொடர்பில் குற்றச்சாட்டு!

July 22, 2026
Next Post
தமிழ் மக்களுடன் பெரும்பான்மை சமூகம் சேர்ந்து பயணிப்பார்களா? -(கட்டுரை)

தமிழ் மக்களுடன் பெரும்பான்மை சமூகம் சேர்ந்து பயணிப்பார்களா? -(கட்டுரை)

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.