மினுவாங்கொட, ஹோரம்பெல்ல, போதிபிஹிதுவல பகுதியில் இன்று (18) காலை 7.30 மணியளவில் வீசிய பலத்த காற்றினால் அப் பகுதியில் ஒரு மதவழிபாட்டுத்தலம், பாடசாலை மற்றும் முப்பதுக்கும் மேற்பட்ட வீடுகள் ஆகியன சேதமடைந்துள்ளன.
பலத்த காற்றினால் அப் பகுதியில் மூன்று வீடுகள் முற்றிலும் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மரங்கள் முறிந்து விழுந்துள்ளமையாலும் பாரிய சேதங்கள் ஏற்பட்டுள்ளன.
அப் பகுதிக்கு பொறுப்பான அதிகாரிகள் சேதடைந்த வீடுகளை பார்வையடையச் சென்றிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.








