காலி, மாத்தறை, களுத்துறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன்படி பிற்பகல் 2.00 மணிக்குப் பிறகு இந்தப் பகுதிகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும், ஊவா மாகாணத்திலும், அம்பாறை, மட்டக்களப்பு, மாத்தளை மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களிலும் சில இடங்களில் மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணத்திலும், களுத்துறை, பதுளை, காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும் அதிகாலை நேரங்களில் சில இடங்களில் மூடுபனியுடன் கூடிய வானிலை எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.








