இலங்கை மகளிர் அணிக்கும் இந்திய மகளிர் அணிக்கும் இடையிலான நான்காவது இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டி இன்று (28) நடைபெறவுள்ளது.
இந்தப் போட்டி இன்று இரவு 7 மணிக்கு இந்தியாவின் திருவனந்தபுரத்தில் தொடங்க உள்ளது.
இந்திய மகளிர் அணி, இரு நாடுகளுக்கும் இடையிலான முதல் மூன்று போட்டிகளில் வெற்றி பெற்றுள்ள நிலையில், ஏற்கனவே டி20 தொடரை வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.









