Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
புதிய ஆண்டு, புதிய தொடக்கம்; தென்கிழக்கு பல்கலைக்கழக முகாமைத்துவ பீடத்துக்கு மாணவர்கள் இணைவு

புதிய ஆண்டு, புதிய தொடக்கம்; தென்கிழக்கு பல்கலைக்கழக முகாமைத்துவ பீடத்துக்கு மாணவர்கள் இணைவு

8 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவ மற்றும் வர்த்தக பீடத்தின் 2024/2025 கல்வியாண்டுக்கான புதிய மாணவர்கள் இணைந்து கொள்ளும் ஆரம்ப நிகழ்வு 2026.01.01 ஆம் திகதி பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள ஏ.ஆர். மன்சூர் ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

முகாமைத்துவ மற்றும் வர்த்தக பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் ஏ.எம்.எம். முஸ்தபா தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் உபவேந்தர் பேராசிரியர் கலாநிதி எஸ்.எம். ஜுனைடீன் பிரதம விருந்தினராக கலந்து கொண்டு புதிய மாணவர்களை நோக்கி சிறப்புரையாற்றினார்.

இந்நிகழ்வின் முக்கிய அம்சமாக 2024/2025 கல்வியாண்டுக்கான Undergraduate Guide வெளியீடு இடம்பெற்றது. இதனைத் தொடர்ந்து பீடத்திற்கு உட்பட்ட துறைத்தலைவர்கள் உரையாற்றினர்.

புதிய கல்விப் பயணத்தை ஆரம்பிக்கும் மாணவர்களுக்கு தெளிவான வழிகாட்டுதலை வழங்கும் முக்கிய நிகழ்வாக இந்த ஆரம்ப விழா அமைந்திருந்தது. புதிய மாணவர்கள் அனைவரும் கல்விப் பயணத்தில் முழுமையான வெற்றியை அடைய வேண்டும் என பல்கலைக்கழக நிர்வாகம் தனது வாழ்த்துக்களை தெரிவித்தது.

நிகழ்வில் பதில் பதிவாளர் எம். ஐ. நௌபர், பீடாதிபதிகள், திணைக்களங்களின் தலைவர்கள், பேராசிரியர்கள், நூலகர், பல்கலைக்கழக பொறியியலாளர், பிரதம பாதுகாப்பு அதிகாரி, சிரேஷ்ட மற்றும் கனிஷ்ட விரிவுரையாளர்கள், நிர்வாக உத்தியோகத்தர்கள் மற்றும் கல்விசாரா உத்தியோகத்தர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

சிறந்த வழியில் பயணிக்கின்றது அநுர அரசு – ஊழல்வாதிகளின் போலியான வேடங்களுக்கு ஏமாறாதீர்கள்; பொன்சேகா எச்சரிக்கை!
செய்திகள்

சிறந்த வழியில் பயணிக்கின்றது அநுர அரசு – ஊழல்வாதிகளின் போலியான வேடங்களுக்கு ஏமாறாதீர்கள்; பொன்சேகா எச்சரிக்கை!

August 24, 2026
அவிசாவளையில் போலி SLS சின்னத்துடன் 8,500 குடிநீர் போத்தல்கள் பறிமுதல்!
செய்திகள்

அவிசாவளையில் போலி SLS சின்னத்துடன் 8,500 குடிநீர் போத்தல்கள் பறிமுதல்!

August 24, 2026
பதுளை போதனா வைத்தியசாலையின் விசேட வைத்தியர் திடீர் மாயம்!
செய்திகள்

பதுளை போதனா வைத்தியசாலையின் விசேட வைத்தியர் திடீர் மாயம்!

August 24, 2026
நாளை முதல் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் தொடர் தொழிற்சங்க நடவடிக்கை
செய்திகள்

நாளை முதல் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் தொடர் தொழிற்சங்க நடவடிக்கை

August 23, 2026
கொழும்புக்கு வருகிறது மின்சார ரயில்
செய்திகள்

கொழும்புக்கு வருகிறது மின்சார ரயில்

August 23, 2026
முச்சக்கர வண்டி ஓட்டும் வயதை 40 ஆக உயர்த்த திட்டம்
செய்திகள்

முச்சக்கர வண்டி ஓட்டும் வயதை 40 ஆக உயர்த்த திட்டம்

August 23, 2026
Next Post
“அலுவலகம் வந்தும் வேலை செய்யாத ஊழியர்கள்” ;இதுவும் ஊழல்தான் என்கிறார் மட்டு அரசாங்க அதிபர்!

"அலுவலகம் வந்தும் வேலை செய்யாத ஊழியர்கள்" ;இதுவும் ஊழல்தான் என்கிறார் மட்டு அரசாங்க அதிபர்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.