யாழ்ப்பாணத்தில் பௌர்ணமி தினத்தில் மதுபான விற்பனையில் ஈடுபட்டவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மானிப்பாய் பகுதியை சேர்ந்த நபர் பௌர்ணமி தினமான நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை மதுபான
விற்பனையில் ஈடுபட்டு வருவதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் சம்பவ
இடத்திற்கு விரைந்த பொலிஸார் மதுபான விற்பனையில் ஈடுபட்ட நபரை கைது செய்தனர்
கைது செய்யப்பட்ட நபரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் போது, விற்பனை நோக்குடன்
பதுக்கி வைத்திருந்த 50 மதுபான போத்தல்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்
குறித்த நபரை மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்து
வருகின்றனர்.







