Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
அரச ஊழியர்களுக்கு தொடர்ச்சியாக மூன்று முறை சம்பள உயர்வு வழங்கியது எமது அரசாங்கமே; பிரதி அமைச்சர்!

அரச ஊழியர்களுக்கு தொடர்ச்சியாக மூன்று முறை சம்பள உயர்வு வழங்கியது எமது அரசாங்கமே; பிரதி அமைச்சர்!

20 minutes ago
in செய்திகள்

ஆட்சிக்கு வந்த பின்னர் அரச ஊழியர்களுக்கு தொடர்ச்சியாக மூன்று முறை சம்பள உயர்வுகளை வழங்கிய ஒரே அரசாங்கம் தேசிய மக்கள் சக்தி அரசாங்கமே என பிரதி அமைச்சர் ஹங்சக விஜேமுணி தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அரச ஊழியர்கள் தமது அரசாங்கத்தின் மீது கொண்டுள்ள நம்பிக்கையின் காரணமாகவே தொடர்ச்சியாக சம்பள உயர்வுகளைக் கோரி வருவதாகவும், இதற்கு முன்னர் ஆட்சியிலிருந்த அரசாங்கங்களிடம் இவ்வாறான கோரிக்கைகளை முன்வைக்க அவர்கள் தயங்கியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

முந்தைய அரசாங்கங்களிடம் சம்பள அதிகரிப்புகளை வழங்குவதற்குப் போதிய நிதி வசதிகள் இருக்கவில்லை என்றும், சில அரசாங்கங்களிடம் நிதி இருந்தபோதிலும் சம்பள உயர்வுகளை வழங்குவதற்கான விருப்பம் இருக்கவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்போதைய அரசாங்கம் அரச ஊழியர்களின் சம்பள முரண்பாடுகள் மற்றும் நீண்டகாலமாகத் தீர்க்கப்படாமல் உள்ள பிரச்சினைகள் தொடர்பில் நன்கு அறிந்துள்ளதாகக் குறிப்பிட்ட அவர், சில பிரச்சினைகளுக்கு உடனடியாகத் தீர்வுகளை வழங்க முடியாது எனவும் தெரிவித்துள்ளார்.

இதற்காகவே சம்பள ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளதாகவும், அதன் ஊடாக அரச ஊழியர்கள் நீண்டகாலமாக எதிர்கொண்டுவரும் சம்பளப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகளைப் பெற்றுக்கொடுக்க முடியும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

மேலும், குறுகிய காலப்பகுதிக்குள் அரச ஊழியர்களுக்கான அடிப்படைச் சம்பளத்தை அதிகரித்துள்ளதாகவும், குறிப்பாக மருத்துவத் துறையில் அடிப்படைச் சம்பளம் ஏறத்தாழ இருமடங்காக உயர்த்தப்பட்டுள்ளதாகவும் பிரதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பெரும்பான்மையான மக்களின் கருத்துகளுக்கும் சில தொழிற்சங்கத் தலைவர்களின் நிலைப்பாடுகளுக்கும் இடையில் வேறுபாடுகள் காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சில தொழிற்சங்கத் தலைவர்கள் தங்களது அரசியல் நிகழ்ச்சி நிரல்களுக்கு அமையச் செயற்படுவதாகக் குற்றஞ்சாட்டிய அவர், அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கும் அரசாங்கத்திடம் தமது கோரிக்கைகளை முன்வைப்பதற்கும் அவர்களுக்கு முழுமையான உரிமை உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

எனினும், தொழிற்சங்க நடவடிக்கைகள் உள்ளிட்ட எந்தவொரு செயற்பாடும் பொதுமக்களின் வாழ்க்கையைப் பாதிக்கும் வகையில் அமையக்கூடாது எனவும், மக்களின் வாழ்க்கையுடன் விளையாடுவதற்கு எவருக்கும் உரிமை கிடையாது எனவும் பிரதி அமைச்சர் ஹங்சக விஜேமுணி வலியுறுத்தியுள்ளார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

காரைதீவுக் கோட்டக் கல்விப் பணிப்பாளராக திருமதி வரணியா சான்ந்தரூபன் கடமையேற்பு!
செய்திகள்

காரைதீவுக் கோட்டக் கல்விப் பணிப்பாளராக திருமதி வரணியா சான்ந்தரூபன் கடமையேற்பு!

November 25, 2026
17 மாவட்டங்களுக்கு அம்பர் நிலை மின்னல் எச்சரிக்கை; பொதுமக்களுக்கு அவதான அறிவுறுத்தல்!
செய்திகள்

17 மாவட்டங்களுக்கு அம்பர் நிலை மின்னல் எச்சரிக்கை; பொதுமக்களுக்கு அவதான அறிவுறுத்தல்!

November 25, 2026
யாழில் நேற்று மதுபானம் விற்றவர் கைது
செய்திகள்

யாழில் நேற்று மதுபானம் விற்றவர் கைது

November 25, 2026
கொடுப்பனவு கோரிய பல்கலை ஊழிய போராட்டத்தினால் பரீட்சைகள் ஒத்திவைப்பு
செய்திகள்

கொடுப்பனவு கோரிய பல்கலை ஊழிய போராட்டத்தினால் பரீட்சைகள் ஒத்திவைப்பு

November 25, 2026
காதலியுடன் Pre-shoot எடுக்கச் சென்ற பொலிஸ் உத்தியோகத்தர் கைது; கண்டியில் நடந்த சம்பவம்!
செய்திகள்

காதலியுடன் Pre-shoot எடுக்கச் சென்ற பொலிஸ் உத்தியோகத்தர் கைது; கண்டியில் நடந்த சம்பவம்!

November 25, 2026
கனடாவில் ஐந்து பாலியல் வன்கொடுமைச் சம்பவங்கள்; 91 வயது முதியவர் கைது!
உலக செய்திகள்

கனடாவில் ஐந்து பாலியல் வன்கொடுமைச் சம்பவங்கள்; 91 வயது முதியவர் கைது!

November 25, 2026
Next Post
காரைதீவுக் கோட்டக் கல்விப் பணிப்பாளராக திருமதி வரணியா சான்ந்தரூபன் கடமையேற்பு!

காரைதீவுக் கோட்டக் கல்விப் பணிப்பாளராக திருமதி வரணியா சான்ந்தரூபன் கடமையேற்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு