Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
EPF செலுத்தாத நிறுவனங்களுக்கு எதிரான நடவடிக்கை தீவிரம்

EPF செலுத்தாத நிறுவனங்களுக்கு எதிரான நடவடிக்கை தீவிரம்

9 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

இலங்கையில் ஊழியர் சேமலாப நிதி (EPF) பங்களிப்புகளைச் சரியாகச் செலுத்தாத நிறுவனங்களுக்கு
எதிராக நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளதாகத் தொழில் அமைச்சு அறிவித்துள்ளது.

இதற்காகத் தொழிலாளர் துறையின் இணையவழி முறைப்பாட்டு மேலாண்மை அமைப்பு (Online Complaint Management System) பலப்படுத்தப்பட்டுள்ளதாகத் தொழில் அமைச்சின் செயலாளர் எஸ்.எம். பியதிஸ்ஸ குறிப்பிட்டுள்ளார்.

இதன்படி ஊழியர்கள் தற்போது தொழிலாளர் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளம் வாயிலாக நேரடியாக முறைப்பாடுகளைப் பதிவு செய்யலாம்.

இதற்கமைய தொடர்பு விபரங்களை வழங்கும் நபர்களுக்கு, சம்பந்தப்பட்ட நிறுவனத்தின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து உடனுக்குடன் அறிவிக்கப்படும் என ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தநிலையில் தவறிழைக்கும் நிறுவனங்களுக்கு முதலில் முறையான அறிவித்தல் அனுப்பப்படுவதுடன், பின்னர் நிறுவனப் பிரதிநிதிகளுடன் நேரடியாகப் பேச்சுவார்த்தை நடத்தி, நிலுவைத் தொகையை மீட்க அதிகாரிகள் முயற்சிப்பார்கள் என தொழில் அமைச்சின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்குப் பின்னரும் நிறுவனங்கள் நிதி செலுத்தத் தவறினால், சட்ட ரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, அபராதத்துடன் கூடிய நிலுவைத் தொகை வசூலிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

2015 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை 22,450 நிறுவனங்கள் ஊழியர் சேமலாப நிதியைச் செலுத்துவதில் தவறிழைத்துள்ளதாக நிதி அமைச்சு நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.

இவற்றின் மொத்த நிலுவைத் தொகை சுமார் 3,498 கோடி ரூபாய்க்கும் (ரூ. 34,989,162,957.81) அதிகம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

1958 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க ஊழியர் சேமலாப நிதிய சட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட இது, இலங்கையின் மிகப்பெரிய சமூகப் பாதுகாப்புத் திட்டமாகும்.

சட்டத்தின்படி, ஊழியர்கள் தங்கள் மாத வருமானத்தில் குறைந்தபட்சம் 8% பங்களிக்க வேண்டும், அதேவேளை முதலாளிகள் 12% பங்களிக்க வேண்டும்.

2024 இறுதி நிலவரப்படி, இந்த நிதியத்தின் சொத்து மதிப்பு 4.4 டிரில்லியன் ரூபாய் ஆகும். ஓய்வூதியக் கால ஆதரவு மட்டுமன்றி, வீட்டுக்கடன் உத்தரவாதம், மருத்துவம் மற்றும் வீட்டுத் தேவைகளுக்காக ஒரு பகுதியைத் திரும்பப் பெறும் வசதிகளையும் இது வழங்குகின்றது.

Tags: BatticaloaNewsBattinaathamnewselectionmattakkalappuseythikalSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

இறக்குமதியாளர்களுக்குப் புதிய கட்டுப்பாடு; ஆவணங்களை சமர்ப்பிக்கும் முறையில் மாற்றம்
செய்திகள்

இறக்குமதியாளர்களுக்குப் புதிய கட்டுப்பாடு; ஆவணங்களை சமர்ப்பிக்கும் முறையில் மாற்றம்

October 8, 2026
ஐரோப்பிய பாராளுமன்றத்தில் ட்ரம்பின் நிர்வாண தங்க சிலை
உலக செய்திகள்

ஐரோப்பிய பாராளுமன்றத்தில் ட்ரம்பின் நிர்வாண தங்க சிலை

October 8, 2026
ஞானசார தேரர் விவகாரத்துக்கு பின் புதிய நடவடிக்கை; பிக்குகளுக்கான சிறை விதிகள் மறுபரிசீலனை
செய்திகள்

ஞானசார தேரர் விவகாரத்துக்கு பின் புதிய நடவடிக்கை; பிக்குகளுக்கான சிறை விதிகள் மறுபரிசீலனை

October 8, 2026
இலங்கையில் மனநல வைத்தியர்களுக்கு கடும் பற்றாக்குறை ; விசேட வைத்தியர் எச்சரிக்கை
செய்திகள்

இலங்கையில் மனநல வைத்தியர்களுக்கு கடும் பற்றாக்குறை ; விசேட வைத்தியர் எச்சரிக்கை

October 8, 2026
நாளை கொழும்பு தேசிய கண் மருத்துவமனைக்கு செல்கிறார் ஷிரந்தி ராஜபக்ச
செய்திகள்

நாளை கொழும்பு தேசிய கண் மருத்துவமனைக்கு செல்கிறார் ஷிரந்தி ராஜபக்ச

October 8, 2026
டெஸ்ட் அணியின் புதிய தலைவராக குசல் மெண்டிஸ் நியமனம்
செய்திகள்

டெஸ்ட் அணியின் புதிய தலைவராக குசல் மெண்டிஸ் நியமனம்

October 8, 2026
Next Post
அமெரிக்க நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட உள்ள நிக்கோலஸ் மதுரோ

அமெரிக்க நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட உள்ள நிக்கோலஸ் மதுரோ

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.