Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
நீர்கொழும்பு சிறையிலிருந்து மட்டு சிறைக்கு மாற்றப்பட்ட கைதியிடம் ஐஸ் போதைப்பொருள் மீட்பு

நீர்கொழும்பு சிறையிலிருந்து மட்டு சிறைக்கு மாற்றப்பட்ட கைதியிடம் ஐஸ் போதைப்பொருள் மீட்பு

8 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

நீர்கொழும்பு சிறைச்சாலையில் கச கைதியை ஊசியால் குத்தி, தண்டனைக்காக மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு கொண்டுவரப்பட்ட சிறைக்கைதியிடம் இருந்து நேற்று புதன்கிழமை (07) இரவு மட்டக்களப்பு சிறைச்சாலை அதிகாரிகள் 128 மில்லிக்கிராம் ஐஸ் போதைப்பொருள் மீட்டதையடுத்து அவரை கைது செய்துள்ளதாக மட்டு தலைமையக பொலிசார் தெரிவித்தனர்.

கொழும்பு கிருலப்பனை பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவரை குற்றச் செயல் ஒன்றின் காரணமாக கைது செய்து நீதிமன்றத்தின் ஆஜர்படுத்தப்பட்டு அவருக்கு சிறை தண்டனை வழங்கிய நிலையில் நீர்கொழும்பு சிறைச்சாலையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த போது சக கைதி ஒருவருக்கு ஊசியால் குத்திய சம்பவம் தொடர்பாக சிறைச்சாலை அதிகாரிகள் நீதிமன்றிற்கு அறிவித்தனர்.

இதனையடுத்து குறித்த கைதியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது நீதவான் மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு மாற்றுமாறு உத்தரவிட்டதை அடுத்து அவர் அங்கிருந்து சிறைச்சாலை பஸ் வண்டியில் ஏற்றப்பட்டு மட்டக்களப்புக்கு சம்பவ தினமான நேற்று இரவு கொண்டுவரப்பட்டுள்ளார்.

இவ்வாறு கொண்டுவரப்பட்டவரை சிறைச்சாலைக்குள் கொண்டு செல்வதற்கு முன்னர் சிறைச்சாலை அதிகாரிகள் அவரை சோதனையிட்ட போது அவரின் உடமையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 128 மில்லிக்கிராம் ஐஸ் போதைப் பொருளை கண்டுபிடித்து மீட்டனர்.

இதனை தொடர்ந்து குறித்த நபரை பொலிசார் கைது செய்து சிறையில் தடுத்து வைத்தனர். அதை தொடர்ந்து குறித்த நபரை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் இன்று வியாழக்கிழமை ஆஜர்படுத்தப்பட்ட போது அவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார் என பொலிசார் தெரிவித்தனர்.

இதேவேளை குறித்த நபர் நீர்கொழும்பு சிறைச்சாலை கைதிகள் கூடத்தில் தடுத்து வைத்திருந்த போது அவரை உறவினர்கள் பார்க்க சென்ற போது அவருக்கு போதை பொருளை வழங்கியிருக்கலாம் அல்லது எந்த வழியில் அவருக்கு கிடைத்திருக்கும் என்ற பல்வேறு கோணங்களில் விசாரணைகளை மட்டு தலைமையக பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

முல்லைத்தீவில் 17,469 ஹெக்டயர் காணிகளை உடனடியாக மக்களிடம் வழங்க வேண்டும்; ரவிகரன்
செய்திகள்

முல்லைத்தீவில் 17,469 ஹெக்டயர் காணிகளை உடனடியாக மக்களிடம் வழங்க வேண்டும்; ரவிகரன்

September 14, 2026
கிளிநொச்சியில் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்வனவு நாளை ஆரம்பம்!
செய்திகள்

கிளிநொச்சியில் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்வனவு நாளை ஆரம்பம்!

September 14, 2026
சாதாரண தரத்திற்கான பாடங்களை ஏழாகக் குறைக்க திட்டம்!
செய்திகள்

சாதாரண தரத்திற்கான பாடங்களை ஏழாகக் குறைக்க திட்டம்!

September 14, 2026
வெலிக்கடை சிறைச்சாலைக்குள் போதைப்பொருள் கடத்த முயற்சி; சிறை அதிகாரி கைது
செய்திகள்

வெலிக்கடை சிறைச்சாலைக்குள் போதைப்பொருள் கடத்த முயற்சி; சிறை அதிகாரி கைது

September 14, 2026
மன்னார் கடற்பரப்பில் வலையில் சிக்கிய 300 கிலோ எடையுடைய பிரமாண்ட மீன்!
செய்திகள்

மன்னார் கடற்பரப்பில் வலையில் சிக்கிய 300 கிலோ எடையுடைய பிரமாண்ட மீன்!

September 14, 2026
நாட்டின் பல பகுதிகளில் வீதி விபத்துகள்; ஒரே நாளில் 5 பேர் உயிரிழப்பு!
செய்திகள்

நாட்டின் பல பகுதிகளில் வீதி விபத்துகள்; ஒரே நாளில் 5 பேர் உயிரிழப்பு!

September 14, 2026
Next Post
உள்நாட்டு விமான சேவையை ஆரம்பிக்க ஜனாதிபதி இணக்கம்; சாணக்கியன் எம்.பி

உள்நாட்டு விமான சேவையை ஆரம்பிக்க ஜனாதிபதி இணக்கம்; சாணக்கியன் எம்.பி

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு