இலங்கையின் பொதுப் போக்குவரத்துச் சேவையை நவீன டிஜிட்டல் தொழில்நுட்பத்துடன் மேம்படுத்தும் நோக்கில் SLTMOBITEL புதிய முன்முயற்சியொன்றை முன்னெடுத்துள்ளது.
இதற்கமைய, www.busticket.gov.lk என்ற இணையத்தளத்தின் டிஜிட்டல் தள சேவை வழங்குநராக SLTMOBITEL செயற்பட்டு வருகின்றது.
நாட்டின் பேருந்துப் போக்குவரத்துச் சேவையில் டிஜிட்டல் வசதிகளை அறிமுகப்படுத்தி, பயணிகளுக்குச் சிறந்த மற்றும் இலகுவான பயண அனுபவத்தை வழங்குவதே இந்தத் திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
தொழில்நுட்ப வளர்ச்சியையும் சேவை மேம்பாட்டையும் ஒன்றிணைத்து, அனைத்து இலங்கையர்களுக்கும் நவீன டிஜிட்டல் பொதுப் போக்குவரத்து அனுபவத்தை ஏற்படுத்துவதை இந்த முயற்சி இலக்காகக் கொண்டுள்ளது.
மேலும், டிஜிட்டல் வசதிகள் ஊடாக போக்குவரத்துச் சேவைகளின் செயற்பாட்டுத் திறனை மேம்படுத்தி, இலங்கையின் பொதுப் போக்குவரத்துக் கட்டமைப்பை எதிர்காலத் தேவைகளுக்கு ஏற்ற வகையில் மாற்றியமைப்பதில் SLTMOBITEL பங்களித்து வருகின்றது.








