பொலிஸ் காவலில் இருந்த சந்தேகநபர் ஒருவர் நிகவெரட்டிய வைத்தியசாலையில் உயிரிழந்த சம்பவம் தொடர்பில், கொபேய்கனே பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இதன்படி, இரண்டு பொலிஸ் சார்ஜன்ட்களும் ஒரு பொலிஸ் கான்ஸ்டபிளும் இவ்வாறு பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
குறித்த உத்தியோகத்தர்கள் கடமையில் தவறிழைத்தமை தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையாகவே இந்தப் பணியிடை நீக்கம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொபேய்கனே, பெத்தேகம பகுதியில் இடம்பெற்ற பல்வேறு திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடையவர் என சந்தேகிக்கப்படும் நபர் ஒருவரை பிரதேச மக்கள் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
இதனையடுத்து, பொலிஸ் காவலில் வைக்கப்பட்டிருந்த குறித்த சந்தேகநபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், கடந்த 27ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பிலேயே மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கும் எதிராக பணியிடை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.







