எதிர்காலத் தேவைகளுக்காகப் பணத்தைச் சேமித்து வைப்பது இனிவரும் காலங்களில் அர்த்தமற்ற செயலாக மாறிவிடும் என உலகின் முன்னணிப் பணக்காரர்களில் ஒருவரான எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களின் தலைவரான அவர், செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் மனித உருவ ரோபோக்களின் வளர்ச்சி உலகில் அதீத வளத்தை உருவாக்கும் என்றும், இதனால் எதிர்காலத்தில் மனிதர்களுக்குப் பணத்தின் தேவை இல்லாமல் போகலாம் என்றும் தனது எக்ஸ் சமூக வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.
செயற்கை நுண்ணறிவு மூலம் பொருட்களும் சேவைகளும் மிகக் குறைந்த செலவில் அனைவருக்கும் கிடைக்கும் சூழல் உருவாகும் என்பதால், எதிர்காலத்திற்காகப் பணத்தைச் சேமிப்பது தேவையற்றதாகிவிடும் என்பதே மஸ்கின் கணிப்பாகும்.
அவரது இந்தக் கருத்து உலகளவில் பொருளாதார வல்லுநர்கள் மற்றும் சமூக வலைத்தளப் பயனர்கள் மத்தியில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.








