Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பரீட்சகரை மாற்ற கோரி கிழக்கு பல்கலை மாணவர்கள் தொடர் போராட்டம்; மயக்கம், வாந்தியால் 8 பேர் வைத்தியசாலையில் அனுமதி

பரீட்சகரை மாற்ற கோரி கிழக்கு பல்கலை மாணவர்கள் தொடர் போராட்டம்; மயக்கம், வாந்தியால் 8 பேர் வைத்தியசாலையில் அனுமதி

8 months ago
in செய்திகள், மட்டு செய்திகள்

கிழக்கு பல்கலைக்கழக சுவாமி விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவகத்தில் நடன நாடகத்துறை பரீட்சகரை மாற்றுமாறு கோரி நான்காம் வருட மாணவர்கள் இரவு பகலாக பணிப்பாளரின் காரியாலயத்துக்கு முன்னால் அமர்ந்து மூன்றாவது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதுடன் 4 பேர் வாந்தி எடுத்து நிலையில் 4 பேர் மயக்கமடைந்த நிலையில் மட்டு போதனா வைத்தியசாலையில் நேற்று வெள்ளிக்கிழமை (09) அனுமதிக்கப்பட்டனர்

குறித்த கற்கை நிறுவகத்தில் நான்காம் வருடம் முதலாம் அரையாண்டில் (2019Æ2020) நடன நாடகத்துறையல் கல்விகற்று வருகின்றனர் இதன் விரிவுரையாளர் ஒழுங்கு முறையாக இரண்டு வகுப்புக்களும் நடைபெறுவதில்லை மட்டுமல்லாது தகாத வார்த்தைகளை பயன்படுத்தி திட்டியதுடன் சில மாணவர்களின் உடலமைப்பை வைத்து கேலி செய்து அவமானப்படுத்துவதுடன் விரிவுரை நேரங்களில் மாணவர்களை சரியான காரணமின்றி வெளியேற்றி விடுகிறார்.

இவ்வாறு விரிவுரையாளர் பல நடவடிக்கைளால் மாணவாகள் ஆகிய நாங்கள் பெரிதும் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளோம் எனவே இவரை மாற்றிதருமாறு கோரி கற்கைகள் நிறுவக பணிப்பாளர் பாரதி கெனடியிடம் 04.03.2025 எழுத்து மூலமாக கடிதம் ஒன்றை கையளித்து முறையிட்டோம் அவர் அதற்கான இரு வாரங்களில் தீர்வு பெற்றுதருவதாக உறுதியளித்தார்.

இருந்தபோதும் எமது கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை அது தொடர்பாக 12.08.2025 அன்று பணிப்பாளரிடம் மீண்டும் கடிதம் மூலமாகவும் நேரடியாகவும் எமது பிரச்சினையை முன்வைத்திருந்தோம். ஆதற்கான தீர்வு கிடைக்காமையினால் மாணவர் ஒன்றியத்தினூடாகவும் கோரிக்கையினை பணிப்பாளர் முனவைக்கப்பட்ட போதிலும் அதற்கான நியாயமான தீர்வு எமக்கு கிடைக்கவில்லை.

எனவே குறித்த பாடத்துக்கான பரீட்சகரை நியமிக்க வேண்டாம் என கோரி கடந்த புதன்கிழமை (07ம் திகதி முதல் 67 மாணவர்கள் பணிப்பாளரின் காரியாலயத்துக்கு முன்னால் அமர்ந்திருந்து அமைதியான போராட்டத்தை ஆரம்பித்து தொடர்ந்து இரவு பகலாக நேற்று இரவு வரை தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதன் போது இதுவரை 4 பேர் மயக்கமடைந்து நிலையிலும் 5 மாணவர்கள் வாந்தி எடுத்த நிலையில் மட்டு போதனா iவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு பாதிக்கப்பட்ட மாணவர்கள் கொட்டும் மழை குளிர்காற்றுக்கு மத்தியில் காரியாலய கட்டிட வெளிபகுதியில் தொடர் போராட்டத்தில் தொடர்ந்தும் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Tags: BatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

முல்லைத்தீவில் 17,469 ஹெக்டயர் காணிகளை உடனடியாக மக்களிடம் வழங்க வேண்டும்; ரவிகரன்
செய்திகள்

முல்லைத்தீவில் 17,469 ஹெக்டயர் காணிகளை உடனடியாக மக்களிடம் வழங்க வேண்டும்; ரவிகரன்

September 14, 2026
கிளிநொச்சியில் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்வனவு நாளை ஆரம்பம்!
செய்திகள்

கிளிநொச்சியில் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்வனவு நாளை ஆரம்பம்!

September 14, 2026
சாதாரண தரத்திற்கான பாடங்களை ஏழாகக் குறைக்க திட்டம்!
செய்திகள்

சாதாரண தரத்திற்கான பாடங்களை ஏழாகக் குறைக்க திட்டம்!

September 14, 2026
வெலிக்கடை சிறைச்சாலைக்குள் போதைப்பொருள் கடத்த முயற்சி; சிறை அதிகாரி கைது
செய்திகள்

வெலிக்கடை சிறைச்சாலைக்குள் போதைப்பொருள் கடத்த முயற்சி; சிறை அதிகாரி கைது

September 14, 2026
மன்னார் கடற்பரப்பில் வலையில் சிக்கிய 300 கிலோ எடையுடைய பிரமாண்ட மீன்!
செய்திகள்

மன்னார் கடற்பரப்பில் வலையில் சிக்கிய 300 கிலோ எடையுடைய பிரமாண்ட மீன்!

September 14, 2026
நாட்டின் பல பகுதிகளில் வீதி விபத்துகள்; ஒரே நாளில் 5 பேர் உயிரிழப்பு!
செய்திகள்

நாட்டின் பல பகுதிகளில் வீதி விபத்துகள்; ஒரே நாளில் 5 பேர் உயிரிழப்பு!

September 14, 2026
Next Post
மட்டக்களப்பில் நிந்தவூர் வைத்தியசாலை ஆம்புலன்ஸ் வண்டி விபத்து ; உயிர் சேதங்கள் தவிர்ப்பு!

மட்டக்களப்பில் நிந்தவூர் வைத்தியசாலை ஆம்புலன்ஸ் வண்டி விபத்து ; உயிர் சேதங்கள் தவிர்ப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு