கிரான் பிரதேச செயலாளர் பிரிவின் சின்னவெம்பு வீட்டுத் திட்டத்தில்
வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்ததினால் மக்கள் பெரும் சிரமத்தை எதிர்நோக்கி வருவதாக கவலை தெரிவிக்கின்றனர்.
குறித்த நீரினை அகற்ற முடியாமல் பெரும் சிரமத்தை எதிர்நோக்கி வருவதாகவும் வருடம் தோறும் பெய்து வரும் பருவ பெயர்ச்சி மழை காரணமாக தாங்கள் பாதிக்கப்படுவதாகவும், வீதிகளில் வெள்ள நீர் நிரம்பி காணப்படுவதனால் போக்குவரத்து மேற்கொள்ள முடியாத நிலை உள்ளதாகவும் மக்களின் குடியிருப்புகளிலும் நீர் தேங்கி காணப்படுவதினால் வெள்ள நீர் வழிந்தோட முடியாத வகையில் தேங்கி காணப்படுவதாகவம் தெரிவிக்கின்றனர்.
600 ற்கும் மேற்பட்ட குடும்பங்களை கொண்ட இக் கிராமத்தில் வெள்ள நீர் பிரச்சினைக்கு தீர்வின்றி உள்ளதாக தெரிவிக்கின்றனர்.இதனால் நோய் தாக்கத்துடன் அன்றாட வாழ்வியலில் பாதிப்பு ம் ஏற்படுவதாக கூறுகின்றனர்.

வருடா வருடம் வெள்ளத்தினால் இப் பிரச்சினையைத் எதிர் நோக்கி வருவதாகவும் நீர் வழிந்தோட முடியாத வகையில் ஒழுங்கமைக்கப்பட்ட கால்வாய் வசதிகள் இல்லாத நிலைமை காணப்படுவதாக தெரிவிக்கின்றனர். வீதிகளும் சேதமடைந்து செப்பனிடப்படாமல் வீதிக்கு மேலால் வெள்ள நீர் பாய்ந்து ஓடுவதினால் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதாகவும் தெரிவிக்கின்றனர் .
மாணவர்கள் பாடசாலைக்கு செல்வதிலும் கர்ப்பிணி பெண்கள் வைத்திய சிகிச்சைக்காக செல்வதில் பெரும் சிரமங்களை எதிர் நோக்கி வருவதுடன் குறித்த விடயத்திற்கு நிரந்தர தீர்வு பெற தேசிய மக்கள் சக்தி முன்வந்து உதவ வேண்டுமென கேட்கிறார்கள்.
மாவட்டத்தில் இடம்பெறுகின்ற மாதாந்த மாவட்ட மட்ட அபிவிருத்தி குழு கூட்டத்தில் நல்லதொரு தீர்மானம் மேற்கொண்டு தாங்கள் எதிர் நோக்கி வரும் நீண்ட கால பிரச்சினைக்கு நல்லதொரு தீர்வு பெற்று தருமாறு கேட்கின்றார்கள்.










