Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
4000 கிராம உத்தியோகத்தர்களை நியமிக்க திட்டம்!

4000 கிராம உத்தியோகத்தர்களை நியமிக்க திட்டம்!

3 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

வெற்றிடமாக உள்ள சுமார் 4 ஆயிரம் கிராம உத்தியோகத்தர் பதவிகளுக்கு விரைவில் ஆட்சேர்ப்பு செய்வது தொடர்பான பணிகள் தற்போது இறுதிக் கட்டத்தில் உள்ளன என்று உள்நாடடலுவல்கள் இராஜாங்க
அமைச்சர் அசோக பிரியந்த தெரிவித்தார்.இந்த விடயம் குறித்து ஆராய பிரதமரின் செயலாளர் அநுர திஸநாயக்க தலை மையிலான குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார்.

நாட்டில் உள்ள 14 ஆயிரத்து 22 கிராம உத்தியோகத்தர் பிரிவுகளையும் டிஜிற்றல் மயமாக்கும் ந-புN திட்டம்
ஏற்கனவே தொடங்கப்பட் டுள்ளதாகவும் இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் வியாழக்கிழமை நடை பெற்ற ஊடக சந்திப்பில் உள் நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த இதனைத் தெரிவித்தார்.மேலும், “நாளை தொடர்பில் நம்பிக்கை இல்லாத தொரு நிலையிலேயே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்த நாட்டை பொறுப்பேற்றார்.

குறிப்பாக, மக்களின் இயல்பு வாழ்க்கையை மீட்டுக் கொண்டு வருவதே எமக்கு வழங்கப்பட்ட பிரதான பணியாக இருந்தது.ஆனாலும் ஜனாதிபதி பதவியேற்ற பின்னர் எடுத்த தொலைநோக்குத் தீர்மானங்களால் ஒரு வருட குறு கிய காலத்தில் நாட்டிலும், கிராமிய மட்டத்திலும் வறுமையை போக்கி, பொருளாதாரத்தை உயர்த்தும் வகையில் பல்வேறு குறிப்பிடத் தக்க மாற்றங்களை ஏற்படுத்த முடிந்துள்ளது.

கிராம அளவில் பொதுமக்களுக்கு சேவைகளை வழங்கும் கட்டமைப்பான கிராமஉத்தியோகத்தர் பதவிகளில்
அதிகளவில் வெற்றிடங்கள் நிலவுகின்ற காரணத்தால், மக்களுக்கான நலன்புரி சேவைகள் உட்பட பல்வேறு
அபிவிருத்தி நடவடிக்கைகளை மேற்கொள்வதில் சிக்கல்கள் தோன்றியுள்ளன. குறிப்பிட்ட மாவட்டங்கள்,
பிரதேசங்கள் மற்றும் நிறுவனங்களில் வெற்றிடங்கள் காணப்படலாம். இதே நேரம் இன்னும் சில பிரதேசங்களில் மேலதிகமாக உத்தியோகத்தர்கள் இருக்கலாம்.எனவே தரவரிசையைப்
பொருட்படுத்தாமல் அரச சேவை சமநிலைப்படுத்தப் பட வேண்டும். இப்போது அரசாங்கம், அரச சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்வதைக் கொள்கை ரீதியில் இடை நிறுத்தி இருந்தாலும், தற் போது வெற்றிடமாக உள்ள சுமார் நான்காயிரம் கிராம உத்தியோகத்தர் பதவிகளுக்கு ஆட்சேர்ப்பு செய்வது தொடர்பான பணிகள் முன் னெடுக்கப்பட்டு வருகின்றன.மேலும், தற்போது, ந-புN வேலைத்திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இது நிர்வாக நடவடிக்கைகளின்போது மக்கள் தமக்கு அவசியமான ஆவணங்களை இணைய வழியில் பெற்றுக்
கொள்வதற்கான ஒரு வேலைத்திட்டமாகும்.

நாடு முழுவதும் இந்த நவீன தொழிநுட்ப பொறி முறையை நடைமுறைப் படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இத்திட்டம் ஏழு மாவட்டங்களில் தற்போது செயல்படுத்தப்படுகிறது. குறிப்பாக களுத்துறை மாவட்டத்தில் 90 சதவீதமும் புத்தளம் மாவட்டத்தில் 50சத வீதமும் செயல்படுத்தப்பட் டுள்ளன. மேலும், இதன்படி,
எதிர்வரும் காலங்களில், நாடு முழுவதிலும் உள்ள 14 ஆயிரத்து 22 கிராம உத்தி யோகத்தர் பிரிவுகளையும்
டிஜிட்டல் மயமாக்குவதற்கு எதிர்பார்க்கப்படுகிறது.” என்றார்.

தொடர்புடையசெய்திகள்

ஈரோஸ் கட்சியுடன் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் விடுதலைப் புலிகள் கட்சி இணைந்து செயற்பட முடிவு
செய்திகள்

ஈரோஸ் கட்சியுடன் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் விடுதலைப் புலிகள் கட்சி இணைந்து செயற்பட முடிவு

September 17, 2026
சில வாகனங்களின் விலை 10 இலட்சம் ரூபாய் வரை குறைந்தது
செய்திகள்

சில வாகனங்களின் விலை 10 இலட்சம் ரூபாய் வரை குறைந்தது

September 17, 2026
கிழக்கு மாகாண காணி ஆக்கிரமிப்புகளைத் தடுக்க விசேட குழு தீவிர நடவடிக்கை
செய்திகள்

கிழக்கு மாகாண காணி ஆக்கிரமிப்புகளைத் தடுக்க விசேட குழு தீவிர நடவடிக்கை

September 17, 2026
வாகரை பிரதேச சபையின் ஏற்பாட்டில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு உதவி
செய்திகள்

வாகரை பிரதேச சபையின் ஏற்பாட்டில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு உதவி

September 17, 2026
சீமெந்து லொறியுடன் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழப்பு-ஒருவர் படுகாயம்
செய்திகள்

சீமெந்து லொறியுடன் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழப்பு-ஒருவர் படுகாயம்

September 17, 2026
இலங்கை வைத்தியசாலைகளில் பேண்டேஜிற்கு தட்டுப்பாடு
செய்திகள்

இலங்கை வைத்தியசாலைகளில் பேண்டேஜிற்கு தட்டுப்பாடு

September 17, 2026
Next Post
தென் பகுதியில் முஸ்லிம் எதிர்ப்புகள் தீவிரமடையுமா?

தென் பகுதியில் முஸ்லிம் எதிர்ப்புகள் தீவிரமடையுமா?

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.