Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கந்தளாய் பகுதிகளில் மர்ம நோய்த் தாக்கம்; பல ஏக்கர் நெற்பயிர்கள் அழிவு

கந்தளாய் பகுதிகளில் மர்ம நோய்த் தாக்கம்; பல ஏக்கர் நெற்பயிர்கள் அழிவு

6 months ago
in செய்திகள்

கந்தளாய் பகுதிகளில் நிலவும் ஒருவித மர்ம நோய்த் தாக்கத்தினால் பல ஏக்கர் கணக்கான நெற்பயிர்கள் மிக வேகமாக அழிவடைந்து வருவதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக பரட்டைக்காடு, எரிக்கிலம்காடு, செட்டிக்காடு, ஏலாம் வாய்க்கால், வட்டுக்கச்சி மற்றும் வான் எல போன்ற பகுதிகளில் இந்தப் பாதிப்பு மிகத் தீவிரமாக உள்ளது.

அண்மையில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்திலிருந்து மீண்டு, தற்போது கதிர் விடும் நிலையில் இருந்த பயிர்கள், திடீரென மஞ்சள் நிறமாக மாறிப் பின்னர் கருகி வருவதால் விவசாயிகளின் பெரும்போகச் செய்கை கேள்விக்குறியாகியுள்ளது.

இந்த நோய்த் தாக்கம் குறித்து விவசாயத் திணைக்கள அதிகாரிகளுக்கு முன்கூட்டியே தகவல் வழங்கப்பட்ட போதிலும், அவர்களால் நோயைக் கண்டறியவோ அல்லது விஞ்ஞான ரீதியான தீர்வுகளை வழங்கவோ முடியவில்லை என விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

அதிகாரிகளின் முறையான வழிகாட்டல் இல்லாத காரணத்தினால், விவசாயிகள் தமது ‘கேள்வி ஞானத்தின்’ அடிப்படையிலும், கிருமிநாசினி விற்பனை நிலைய உரிமையாளர்களின் பரிந்துரையிலும் பல்வேறு மருந்துகளைப் பயன்படுத்தி வருகின்றனர். இவ்வாறான தெளிவற்ற முறைகளால் பயிர்கள் மேலும் பாதிக்கப்பட்டு, விவசாயிகளுக்குப் பாரிய பொருளாதார நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

விவசாய அதிகாரிகளின் நேரடிப் பங்களிப்பு இல்லாத நிலையில், தமக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை என கவலை வெளியிட்டுள்ள விவசாயிகள், நோய் என்னவென்று தெரியாமல் கண்ட கண்ட மருந்துகளைத் தெளிப்பதாலேயே பாதிப்பு இரட்டிப்பாவதாகத் தெரிவிக்கின்றனர்.

பல வகையான மருந்துகளைத் தெளித்தும் இந்த நோயைக் கட்டுப்படுத்த முடியாமல் போனது விவசாயிகளிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

மட்டு மேயர் சுகாதார பரிசோதகர்களை வைத்து தன்னை அச்சுறுத்துவதாக அந்தனிசில் ராஜ்குமார் குற்றச்சாட்டு
காணொளிகள்

மட்டு மேயர் சுகாதார பரிசோதகர்களை வைத்து தன்னை அச்சுறுத்துவதாக அந்தனிசில் ராஜ்குமார் குற்றச்சாட்டு

July 23, 2026
கிளிநொச்சியில் அதிரடி சோதனை; 6.5 கிலோ கேரள கஞ்சா மற்றும் இரு மோட்டார் சைக்கிள்கள் மீட்பு!
செய்திகள்

கிளிநொச்சியில் அதிரடி சோதனை; 6.5 கிலோ கேரள கஞ்சா மற்றும் இரு மோட்டார் சைக்கிள்கள் மீட்பு!

July 23, 2026
அடிப்படை உரிமைகளை மீறியதாக தேசபந்துவுக்கு எதிராக உயர் நீதிமன்றம் தீர்ப்பு!
செய்திகள்

அடிப்படை உரிமைகளை மீறியதாக தேசபந்துவுக்கு எதிராக உயர் நீதிமன்றம் தீர்ப்பு!

July 23, 2026
மல்லிகைப்பூ சந்தியில் முறிந்து விழுந்த மரம்; போக்குவரத்து கடும் பாதிப்பு!
செய்திகள்

மல்லிகைப்பூ சந்தியில் முறிந்து விழுந்த மரம்; போக்குவரத்து கடும் பாதிப்பு!

July 23, 2026
உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்க கோரிய மனு நிராகரிப்பு; திட்டமிட்டபடி பரீட்சை நடைபெறும்
செய்திகள்

உயர்தரப் பரீட்சையை ஒத்திவைக்க கோரிய மனு நிராகரிப்பு; திட்டமிட்டபடி பரீட்சை நடைபெறும்

July 23, 2026
குருக்கள் மட சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி தொடர்பில் நீதிமன்ற உத்தரவு
செய்திகள்

குருக்கள் மட சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி தொடர்பில் நீதிமன்ற உத்தரவு

July 23, 2026
Next Post
ஜனவரி முதல் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் அதிகரிப்பு

ஜனவரி முதல் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளம் அதிகரிப்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு