Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
யுத்தம், யானை தாக்குதலில் வீட்டை இழந்த பல்கலைக்கழக மாணவியின் குடும்பத்திற்கு வீடு கையளிப்பு!

யுத்தம், யானை தாக்குதலில் வீட்டை இழந்த பல்கலைக்கழக மாணவியின் குடும்பத்திற்கு வீடு கையளிப்பு!

7 months ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

மட்டக்களப்பு ஏறாவூர் பற்று கித்துள் கிராமத்தில் யுத்தம் காரணமாக தனது உறவுகளை இழந்து, யானைகளின் தாக்குதலில் வீட்டை இழந்து மிகவும் வறுமைக் மத்தியில் யாழ் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்றுவரும் மாணவியின் குடும்பத்திற்கு லண்டன் ஈழப் பதீஸ்வரர் ஆலயத்தின் ஊடாக வீடு கையளிக்கப்பட்டது.

சிரேஸ்ட ஊடகவியலாளரும் ஏறாவூர் பற்று பிரதேச சபை உறுப்பினருமான செ. நிலாந்தன் அவர்களின் ஊடாக விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கு அமைய லண்டன் ஈழப் பதீஸ்வரர் ஆலயத்தின் தலைவர் ஜெயதேவன் அவர்கள் உடனடியாக செயற்பட்டு மட்டக்களப்பு இணைப்பாளர்களான ஆனந்தராஜா, அனோஜன் ஆகியோரின் முயற்சியில் குறித்த குடும்பத்திற்கான குளியலறை, மலசலகூடம், மின்சார வசதிகளுடன் கூடிய வீடு புனரமைப்பு செய்யப்படு கையளிக்கப் பட்டதுடன், மேற்படி குடும்பத்தின் வாழ்வாதாரத்திற்காக கோழி வளர்ப்பிற்கான கோழி கூடு ஒன்றும் நிர்மானித்து கொடுக்கப்பட்டுள்ளது.

இன்றைய தினம் நடைபெற்ற மேற்படி வீடு கையளிக்கும் நிகழ்வில் சிரேஸ்ட ஊடகவியலாளரும் ஏறாவூர் பற்று பிரதேச சபை உறுப்பினருமான செ நிலாந்தன், பெரிய புல்லுமலை கித்தூள் வட்டார பிரதேச சபை உறுப்பினர் சிவானந்தன், ஈழப் பதீஸ்வரர் ஆலயத்தின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர்களான ஆனந்தராசா, அனோஜன், ஆகியோர் கலந்து கொண்டு வீட்டை திறந்து வைத்தனர்.

வேண்டுகோள் விடுத்தவுடன் எந்த வித மறுப்பும் தெரிவிக்காது குறித்த வீட்டை புனரமைத்து தந்ததோடு குறித்த குடும்பத்தின் வாழ்வாதாரத்திற்கு கோழி கூடு மற்றும் பல்கலைக்கழக மாணவியின் கல்விக்கான செலவுகளை ஏற்படுத்தி தந்த லண்டன் ஈழப் பதீஸ்வரர் ஆலயத்தின் தலைவர் ஜெயதேவன் ஐயா அவர்களுக்கும், மாவட்ட இணைப்பாளர்களான ஆனந்தராசா, அனோஜன் ஆகியோருக்கு ஏறாவூர் பற்று பிரதேச சபை உறுப்பினர் நிலாந்தன் தனது நன்றிகளை தெரிவித்ததோடு, வீட்டை பெற்றுக் கொண்ட குடும்பம் சார்பாக பல்கலைக்கழக மாணவி தனது நன்றிகளை தெரிவித்தார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankapolice

தொடர்புடையசெய்திகள்

அங்குலான கடற்படை படகு விபத்து; காணாமல் போன அதிகாரியின் சடலம் மீட்பு!
செய்திகள்

அங்குலான கடற்படை படகு விபத்து; காணாமல் போன அதிகாரியின் சடலம் மீட்பு!

September 4, 2026
அரசாங்கத்தின் நல்ல திட்டங்களை பாராட்டும் மனப்பக்குவம் எதிர்க்கட்சிகளுக்கு அவசியம்; செந்தில் தொண்டமான்
செய்திகள்

அரசாங்கத்தின் நல்ல திட்டங்களை பாராட்டும் மனப்பக்குவம் எதிர்க்கட்சிகளுக்கு அவசியம்; செந்தில் தொண்டமான்

September 4, 2026
பல மாகாணங்களில் கனமழைக்கு வாய்ப்பு; பொதுமக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!
செய்திகள்

பல மாகாணங்களில் கனமழைக்கு வாய்ப்பு; பொதுமக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

September 4, 2026
புலமைப்பரிசில் பரீட்சையில் மிக்கேல் கல்லூரிக்கு பெருமை சேர்த்த அகர்வின்
செய்திகள்

புலமைப்பரிசில் பரீட்சையில் மிக்கேல் கல்லூரிக்கு பெருமை சேர்த்த அகர்வின்

September 4, 2026
21 நாடுகளில் 2 கோடி குழந்தைகள் இணையவழி பாலியல் துஷ்பிரயோகத்துக்கு இலக்கு; UNICEF அதிர்ச்சி தகவல்
உலக செய்திகள்

21 நாடுகளில் 2 கோடி குழந்தைகள் இணையவழி பாலியல் துஷ்பிரயோகத்துக்கு இலக்கு; UNICEF அதிர்ச்சி தகவல்

September 4, 2026
வெள்ளத்தையும் பொருட்படுத்தாது தேவாலயத்தில் திருமணம் செய்த இளம் ஜோடி!
உலக செய்திகள்

வெள்ளத்தையும் பொருட்படுத்தாது தேவாலயத்தில் திருமணம் செய்த இளம் ஜோடி!

September 4, 2026
Next Post
16,000 ஊழியர்களைப் பணி நீக்கம் செய்த அமேசான் நிறுவனம்

16,000 ஊழியர்களைப் பணி நீக்கம் செய்த அமேசான் நிறுவனம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு