Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
நஷ்ட ஈட்டினை உடனடியாக வழங்குங்கள்:மட்டு தேசிய கமக்காரர்கள் அதிகாரசபை

நஷ்ட ஈட்டினை உடனடியாக வழங்குங்கள்:மட்டு தேசிய கமக்காரர்கள் அதிகாரசபை

7 months ago
in காணொளிகள், செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

2025, 2026 ஏற்பட்ட வெள்ளத்தினால் பகுதி அளவான சேதங்களுக்கும் சில முழுமையான சேதங்களுக்கும் இன்னும் நஷ்ட ஈடு வழங்கப்படாமல் உள்ளது, அதனையும் கருத்தில் கொண்டு அரசாங்கம் உடனடியாக அவற்றினையும் அந்த நஷ்ட ஈட்டினையும் எங்களது விவசாயிகளுக்கு உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட தேசிய கமக்காரர்கள் அதிகாரசபையின் தலைவர் சந்திரசேகரம் சந்திரமோகன் தெரிவித்தார்.

மட்டு ஊடக அமையத்தில் மட்டக்களப்பு மாவட்ட தேசிய கமக்காரர்கள் அமைப்புகளின் அதிகாரசபையின் உறுப்பினர்களின் ஊடக சந்திப்புநேற்று (30) நடைபெற்றது.

இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர்,

2025, 2026 பெரும் போக நெல் அறுவடை தற்போது பதினைந்து நாட்களாக மாவட்டத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது உங்களுக்கு தெரியும் ஏற்கனவே இடம் பெற்ற பெருவெள்ளத்தினால் எங்களுடைய மாவட்டம் பெருவாரியாக பாதிக்கப்பட்டதுடன் தற்போது அறக்கொத்தி தாக்கதாலும் தொடர்ந்து பாதிக்கப்பட்டு கொண்டிருக்கின்றது. இந்த அறுவடை நடந்து கொண்டிருக்கின்ற வேளையிலும் அரசாங்கம் முந்தைய அரசாங்கத்தை விட தற்போது நெல்லுக்கான நிர்ணய விலையினை முந்தி அறிவித்ததற்கு நாங்கள் நன்றி கூறுகின்றோம்.

இருந்தாலும் நெல்லுக்கான நிர்ணய விலையினை அறிவித்திருந்தாலும் மட்டக்களப்பு நெல் சந்தைப்படுத்தல் சபையினை திறந்து அதன் மூலம் நெல்லினை கொள்வனவு செய்யாவிட்டால் இடைத்தர இடைத்தரகர்கள் தற்போது இன்றைய நிலையில் 5500 ரூபா அந்த விலைக்குள் நெல்லினை கொள்வனவு செய்து கொண்டிருக்கின்றார்கள். அதனால் ஏற்கனவே எங்களுடைய மாவட்டத்திலே நான் நினைக்கிறேன் ஒரு 15 மூடைதான் சராசரியாக விளைவு கிடைக்கப் பெற்றிருக்கின்றது. அவ்வாறு இருக்கையில் இடைத்தரகர்களுக்கு இந்த வாய்ப்பினை அல்லது எங்களை சுரண்டும் அந்த வாய்ப்பினை வழங்காமல் உடனடியாக நெல் சந்தைப்படுத்தும் சபையினை திறக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.

தற்போது நெல் சந்தைப்படுத்தும் சபையின் பிராந்திய முகாமையாளர் என்னுடன் தொடர்பினை ஏற்படுத்தியிருந்தார். திங்கட்கிழமை தான் கட்டாயம் மட்டக்களப்பு மாவட்டத்தில் நெல் சந்தைப்படுத்தல் சபையினை திறந்து நெல்லிணை கொள்வனவு செய்வதாக அறிவித்திருந்தார். கட்டாயம் அந்த நெல் சந்தைப்படுத்தல் சபை திறந்து நெல் கொள்வனவு செய்யப்படும் என நாங்கள் நம்புகின்றோம்.

அடுத்ததாக 2024, 2025 ஆம் ஆண்டு ஏற்பட்ட பெருவெள்ளம் காரணமாக நஷ்ட ஈடு விண்ணப்பங்கள் நாங்கள் கொடுத்தும் இன்று வரை அதற்கான நட்ட ஈடுகளும் வழங்கப்படாமல் உள்ளது. அதனையும் அரசாங்கம் பரிசீலனை செய்து எமது மக்களுக்கு எமது விவசாயிகளுக்கு உரிய நஷ்ட ஈட்டை வழங்க வேண்டும் என கேட்டுக் கொள்வதோடு.

தற்போது 2025, 2026 ஏற்பட்ட வெள்ளத்தினால் பகுதி அளவான சேதங்களுக்கும் சில முழுமையான சேதங்களுக்கும் இன்னும் நஷ்ட ஈடு வழங்கப்படாமல் உள்ளது அதனையும் கருத்தில் கொண்டு அரசாங்கம் உடனடியாக அவற்றினையும் அந்த நஷ்ட ஈட்டினையும் எங்களது விவசாயிகளுக்கு உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வினயமாக கேட்டுக் கொள்கின்றோம்.

அரசாங்கம் எமது நாட்டு நெல்லுக்கு 120 ரூபாய் அறிவித்து இருக்கின்றது. உண்மையில் அந்த விலை எங்களுக்கு போதுமானதாக இல்லை. இருந்தாலும் அந்த நிர்ணயவிலை என்று சொல்லும்போது அரசாங்கம் அறிவித்தது நல்ல விடயம். இருந்தாலும் அந்த நெல் விலை போதுமானதாக இல்லை எங்களது உற்பத்தி செலவுடன் ஒப்பிடும்போது அந்த நெல் விலை போதுமானதாக இல்லை.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

மல்வத்து ஓயா நீர்த்தேக்கத் திட்டத்தை நிறைவு செய்ய அரசாங்கம் இலக்கு; ஜனாதிபதி அநுர!
செய்திகள்

மல்வத்து ஓயா நீர்த்தேக்கத் திட்டத்தை நிறைவு செய்ய அரசாங்கம் இலக்கு; ஜனாதிபதி அநுர!

September 5, 2026
நானுஓயா கிளாஸ்சோ நீர்வீழ்ச்சியில் நீரில் மூழ்கி இருவர் உயிரிழப்பு
செய்திகள்

நானுஓயா கிளாஸ்சோ நீர்வீழ்ச்சியில் நீரில் மூழ்கி இருவர் உயிரிழப்பு

September 5, 2026
பலாலி அந்தோனிபுரத்தில் கிணற்றுக்குள் பெருமளவு வெடிபொருட்கள் கண்டெடுப்பு!
செய்திகள்

பலாலி அந்தோனிபுரத்தில் கிணற்றுக்குள் பெருமளவு வெடிபொருட்கள் கண்டெடுப்பு!

September 5, 2026
காரைதீவில் அதிகரிக்கும் யானைகள் நடமாட்டம்; உடனடி நடவடிக்கை கோரும் பிரதேச சபை தவிசாளர்!
செய்திகள்

காரைதீவில் அதிகரிக்கும் யானைகள் நடமாட்டம்; உடனடி நடவடிக்கை கோரும் பிரதேச சபை தவிசாளர்!

September 5, 2026
ஆபிரிக்காவின் உண்மையான அளவைக் காட்டும் புதிய உலக வரைபடம் விரைவில்!
செய்திகள்

ஆபிரிக்காவின் உண்மையான அளவைக் காட்டும் புதிய உலக வரைபடம் விரைவில்!

September 5, 2026
நெடுந்தூர தனியார் பேருந்துகளில் AI கண்காணிப்பு; பாதுகாப்பை மேம்படுத்த புதிய திட்டம்!
செய்திகள்

நெடுந்தூர தனியார் பேருந்துகளில் AI கண்காணிப்பு; பாதுகாப்பை மேம்படுத்த புதிய திட்டம்!

September 5, 2026
Next Post
மண்முனை தென்எருவில் பற்று பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்

மண்முனை தென்எருவில் பற்று பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.