Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
உண்ணாவிரத போராட்டம் இருக்கும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் பதவியை பறித்து பட்டதாரிகளுக்கு வழங்குங்கள்

உண்ணாவிரத போராட்டம் இருக்கும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் பதவியை பறித்து பட்டதாரிகளுக்கு வழங்குங்கள்

8 months ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக நியமிக்கப்பட்டு கடமையாற்றி வரும் பட்டதாரிகள் நினைத்த ஆசிரியர் நியமனத்தை கேட்டு உண்ணாவிரதம் இருப்பது ஏற்றுக் கொள்ள முடியாது. எனவே நாடாளுமன்றத்தை கூட்டி இவர்களை பணி நீக்கம் செய்துவிட்டு இவர்கள் இடத்துக்கு பல்கலைக்கழக பட்டபடிப்பை முடித்து கூலி வேலை செய்துவரும் ஆயிரக்கணக்கான பட்டதாரிகளுக்கு நியமனங்களை ஜனாதிபதி வழங்க வேண்டும் என ஈ.பி.டி.பி மட்டு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அந்தனிசில் ராஜ்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மட்டக்களப்பு வொய்ஸ் ஒப் மீடியா கற்கை நிலையத்தில் இன்று வெள்ளிக்கிழமை (30) இடம்பெற்ற ஊடக மாநாட்டில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

பல்கலைக்கழக படிப்பை பூர்த்தி செய்த எத்தனையே பட்டதாரிகள் கூலி வேலைக்கு செல்கின்றனர் அவர்கள் கூறுகின்றனர் இந்த வேலை வாய்ப்பு தங்களுக்கு கிடைத்தால் எந்த பிரச்சனையும் இன்றி இந்த நியமனத்தை ஏற்றுக் கொள்ள முடியும்.

எங்களுக்கு வேலை வாய்ப்புகள் வழங்கப்படவில்லை இவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட்டும் இவர்கள் நினைத்த வேலைவாய்ப்பை கோரி உண்ணாவிரதம் இருக்கின்றனர் என்கின்றனர்.

எனவே உண்ணா விரதம் இருக்கும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களிடம் தயவாக கேட்டுக் கொள்கிறோம் வேலையில்லா பட்டதாரிகள் என வீதிக்கு இறங்கி போராடிய போது உங்களுக்கு அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான நியமனம் வழங்கப்பட்டது. எனவே வழங்கப்பட்ட இந்த தொழிலை ஏற்றுக் கொண்டு உண்ணாவிரத போராட்டத்தை கைவிட்டு முடியுங்கள்.

இப்போது ஆசிரியர் நியமனத்தை கேட்டு உண்ணாவிரதம் இருக்கிறீர்கள் இன்று எத்தனையோ பட்டதாரிகள் அரச வேலையின்றி மேசன் மற்றும் கூலி தொழில்களுக்குச் செல்கின்றனர். அவர்களுக்கு அரசாங்க வேலை இல்லை உங்களுக்கு வேலை வழங்கியும் நீங்கள் நினைத்த வேலையை கேட்டு உண்ணாவிரதம் இருப்பது கண்டிக்கப்பட வேண்டிய விடயம்.

உங்களுக்கு ஆசிரியர் தொழில்தான் வேண்டுமாயின் அபிவிருத்தி உத்தியோகத்தர் தொழிலுக்கு செல்லாமல் ஆசிரியர் நியமனம் கிடைக்கு மட்டும் நீங்கள் உங்கள் தொழில்களை கைவிடுங்கள்.

எனவே ஜனாதிபதியிடம் வேண்டிக் கொள்வது நாடு இக்கட்டான சூழ்நிலையில் இருக்கின்ற காரணத்தால் இவ்வாறான தேவையற்ற ஆர்ப்பாட்டங்களை செய்து நாட்டை குழப்புவதை நீங்கள் பார்த்து கொண்டு இருக்காமல் பாராளுமன்ற பெரும்பான்மை உங்களிடம் இருப்பதால் உடனடியாக நாடாளுமன்றத்தை கூட்டி பெரும்பான்மையை எடுத்து இவர்களுக்கான ஒரு தீர்மானத்தை கொண்டு வாருங்கள்.

ஒன்று இவர்களுக்கு ஆசிரியர் நியமனம் கிடைக்கும் வரைக்கும், இவர்களுக்கு ஆசிரியர் நியமனம் தேவை என்றால் இவர்களின் அரச பணியை இடைநீக்கிவிட்டு வேலையற்ற பட்டதாரிகளுக்கு அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான நியமனங்களை வழங்குங்கள். இவர்களுக்கான ஆசிரியர் வெற்றிடங்கள் இருக்கும் போது இவர்களுக்கான ஆசிரியர் நியமனங்களை வழங்குங்கள்.

எனவே போதியளவு பெரும்பான்மை நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருந்தால் இந்த நாட்டை குழப்பி கொண்டு இருப்பவர்களுக்கு ஒரு முக்கியமான தீர்மானத்தை எடுத்து இவர்களுடைய உண்ணாவிரத போராட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து வேலை இல்லா பட்டதாரிகளுக்கு அந்த நியமனங்களை வழங்கிவிட்டு ஆசிரியர் நியமன வெற்றிடங்கள் வரும் வரைக்கும் இவர்களை காத்திருக்குமாறு கூறி இந்த உண்ணாவிரத போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவரும்படி ஜனாதிபதியிடம் தயவாக கேட்டுக் கொள்கின்றோம் என்றார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

தெஹிவளை கைக்குண்டுத் தாக்குதல்; இரு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் குறித்து ஐ.நா கவலை!
செய்திகள்

தெஹிவளை கைக்குண்டுத் தாக்குதல்; இரு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் குறித்து ஐ.நா கவலை!

September 12, 2026
பிரதமர் தலைமையில் மட்டக்களப்பில் 55 மாற்றுத்திறனாளி பல்கலைக்கழக மாணவர்கள் கௌரவிப்பு!
மட்டு செய்திகள்

பிரதமர் தலைமையில் மட்டக்களப்பில் 55 மாற்றுத்திறனாளி பல்கலைக்கழக மாணவர்கள் கௌரவிப்பு!

September 12, 2026
ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதிகள் அல்ல அவர்கள் தீவிரவாதிகள் !
செய்திகள்

ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதிகள் அல்ல அவர்கள் தீவிரவாதிகள் !

September 12, 2026
கைது செய்யப்பட்ட ஷிரான் பாஸிக்கின் தந்தை விளக்கமறியலில்
செய்திகள்

கைது செய்யப்பட்ட ஷிரான் பாஸிக்கின் தந்தை விளக்கமறியலில்

September 12, 2026
மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான மொட்டு கட்சிக் கூட்டத்தில் அர்ச்சுனா எம்.பி. பங்கேற்பு!
செய்திகள்

மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான மொட்டு கட்சிக் கூட்டத்தில் அர்ச்சுனா எம்.பி. பங்கேற்பு!

September 12, 2026
நல்லூர் தேர் திருவிழாவில் தாலிக்கொடி அறுத்த பெண் கைது!
செய்திகள்

நல்லூர் தேர் திருவிழாவில் தாலிக்கொடி அறுத்த பெண் கைது!

September 12, 2026
Next Post
உண்ணாவிரத போராட்ட பட்டதாரிகளுடன் கலந்துரையாட ஜனாதிபதி தீர்மானம்

உண்ணாவிரத போராட்ட பட்டதாரிகளுடன் கலந்துரையாட ஜனாதிபதி தீர்மானம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.