Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டு இந்துக்கல்லூரியின் 80வது ஆண்டு நிறைவு விழா கொண்டாட்டம்!

மட்டு இந்துக்கல்லூரியின் 80வது ஆண்டு நிறைவு விழா கொண்டாட்டம்!

6 months ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

மட்டக்களப்பின் பிரபல பாடசாலைகளில் ஒன்றான மட்டக்களப்பு இந்துக்கல்லூரியின் 80வது ஆண்டு நிறைவு விழா இன்று (01) வெகுவிமர்சையாக நடைபெற்றது.

மட்டக்களப்பு இந்துக்கல்லூரி பழைய மாணவர்கள் சங்கத்தின் ஏற்பாட்டில் இன்று பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றன.

இந்துக்கல்லூரியில் உள்ள தண்டாயுதபாணி ஆலயத்தில் விசேட வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டதுடன் மாணவர்களினால் கிறிஸ்தவ வழிபாடுகளும் முன்னெடுக்கப்பட்டன.

அதனை தொடர்ந்து தேசியக்கொடி, பாடசாலை கொடி, பழைய மாணவர்கள் கொடியேற்றப்பட்டதுடன் தேசிய கீதம் இசைக்கப்பட்டதை தொடர்ந்து கல்லூரியின் ஸ்தாபர் நல்லையா மாஸ்டரின் உருவச்சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.

பாடசாலையின் அதிபர் பகீரதன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக பாடசாலையின் பழைய மாணவரும் மட்டக்களப்பு மாநகரசபையின் ஆணையாளருமான என்.தனஞ்செயன் கலந்துகொண்டார்.

இந்த நிகழ்வில் இந்துக்கல்லூரிக்கு அண்மையாகவுள்ள ஊட்டப்பாடசாலைகளில் பல்வேறு சாதனைகளை படைத்த மாணவர்களும் இதன்போது கௌரவிக்கப்பட்டனர்.

பாடசாலையின் 80வது ஆண்டினை சிறப்பிக்கும் வகையில் பழைய மாணவர் சங்கத்தினால் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையுடன் இணைந்து இரத்ததான நிகழ்வும் இதன்போது ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தது.
பெருமளவான மாணவர்கள், பழைய மாணவர்கள் கலந்துகொண்டு இரத்தம் வழங்கியதை காணமுடிந்தது.

அதேசமயம் மட்டக்களப்பு இந்துக்கல்லூரியானது 1946ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 01ஆம் திகதி முன்னாள் கல்குடா தொகுதி பாராளுமன்ற உறுப்பினரான நல்லையா மாஸ்டர் என்பவரினால் ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Tags: BatticaloaNewsBattinaathamnewspoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

வாசலில் குழுமியிருக்கவேண்டாம் என தெரிவித்த யாழ் போதனா பெண் பாதுகாப்பு உத்தியோகஸ்தர் மீது தாக்குதல்
செய்திகள்

வாசலில் குழுமியிருக்கவேண்டாம் என தெரிவித்த யாழ் போதனா பெண் பாதுகாப்பு உத்தியோகஸ்தர் மீது தாக்குதல்

July 29, 2026
மயிலம்பாவெளி விபுலானந்தபுரம் மாரியம்மன் ஆலயத்தில் வாள்வெட்டு தாக்குதல் நடாத்திவிட்டு குழுவொன்று தப்பியோட்டம்
செய்திகள்

மயிலம்பாவெளி விபுலானந்தபுரம் மாரியம்மன் ஆலயத்தில் வாள்வெட்டு தாக்குதல் நடாத்திவிட்டு குழுவொன்று தப்பியோட்டம்

July 29, 2026
காத்தான்குடியில் ஜெயந்திபுரத்தை சேர்ந்த மேசன் தொழிலாளி தூண் இடிந்து வீழ்ந்ததில் உயிரிழப்பு
செய்திகள்

காத்தான்குடியில் ஜெயந்திபுரத்தை சேர்ந்த மேசன் தொழிலாளி தூண் இடிந்து வீழ்ந்ததில் உயிரிழப்பு

July 29, 2026
சமூக ஊடக விளம்பரத்தில் வீடு, காணி எனக் கூறி கோடிக்கணக்கில் மோசடி; நிறுவன பணிப்பாளர் கைது
செய்திகள்

சமூக ஊடக விளம்பரத்தில் வீடு, காணி எனக் கூறி கோடிக்கணக்கில் மோசடி; நிறுவன பணிப்பாளர் கைது

July 29, 2026
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்தும் முன்மொழிவுக்கு சட்டத்தரணிகள் சங்கத்தின் தீர்மானம்
செய்திகள்

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்தும் முன்மொழிவுக்கு சட்டத்தரணிகள் சங்கத்தின் தீர்மானம்

July 29, 2026
42 ஆயிரம் ஹெக்டேர் காடுகள் சாம்பல்; பிரான்ஸில் பெரும் காட்டுத்தீயால் பரபரப்பு!
செய்திகள்

42 ஆயிரம் ஹெக்டேர் காடுகள் சாம்பல்; பிரான்ஸில் பெரும் காட்டுத்தீயால் பரபரப்பு!

July 29, 2026
Next Post
சூறாவளி நஷ்டஈட்டு காசோலைகள் மறுக்கப்பட்டதன் பின்னணியில் அதிகாரிகள்; அரசிடம் பணம் உள்ளது என்கிறார் ஆனந்த விஜயபால

சூறாவளி நஷ்டஈட்டு காசோலைகள் மறுக்கப்பட்டதன் பின்னணியில் அதிகாரிகள்; அரசிடம் பணம் உள்ளது என்கிறார் ஆனந்த விஜயபால

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு