Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
திருகோணமலை புத்தர் சிலை விவகாரம்; 4 தேரர்கள் உட்பட 10 பேருக்கு மீண்டும் விளக்கமறியல்

திருகோணமலை புத்தர் சிலை விவகாரம்; 4 தேரர்கள் உட்பட 10 பேருக்கு மீண்டும் விளக்கமறியல்

8 months ago
in செய்திகள்

திருகோணமலை கடற்கரைப் பகுதியில் உரிய அனுமதியின்றி புத்தர் சிலை அமைத்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட பலங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 10 சந்தேகநபர்களையும் எதிர்வரும் பெப்ரவரி 9ஆம் தேதி வரை விளக்கமறியலில் வைக்க திருகோணமலை நீதவான் நீதிமன்றம் இன்று (02) உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2025 நவம்பர் 16ஆம் தேதி, திருகோணமலை நகரின் கடற்கரை ஓரத்தில் ஒரு குழுவினருடன் இணைந்த பௌத்த பிக்குகள், உரிய அனுமதியின்றி விகாரை அமைப்பதற்காக அடிக்கல் நாட்டி புத்தர் சிலையை பிரதிஷ்டை செய்தனர்.

குறித்த பகுதி கரையோர பாதுகாப்புத் திணைக்களத்திற்குச் சொந்தமானது. இக்கட்டுமானத்திற்கு நகர சபையிடமோ அல்லது திணைக்களத்திடமோ எவ்வித சட்டபூர்வ அனுமதியும் பெறப்படவில்லை என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் கரையோர பாதுகாப்பு திணைக்களத்தினால் இந்த வழக்கு தொடரப்பட்டது.

திருகோணமலை நீதவான் எம். என். எம். சம்சுதீன் முன்னிலையில் இந்த வழக்கு கடந்த ஜனவரி 28ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது இன்று (02) வரை அவர்களுக்கு விளக்கமறியல் நீடிக்கப்பட்டிருந்தது.

இன்று (2)காலை பலங்கொட கஸ்ஸப தேரர் மற்றும் நான்கு பிக்குகள் உட்பட 10 சந்தேகநபர்களும் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.

சந்தேகநபர்களுக்கு எதிராகக் கரையோரப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளைத் திரும்பப் பெறுவதற்குச் சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் திருகோணமலை துறைமுகப் பொலிஸார் கடும் மறுப்புத் தெரிவித்தனர்.

இதனையடுத்து, சந்தேக நபர்களின் பிணைக்கோரிக்கையை நிராகரித்த நீதிபதி, எதிர்வரும் பெப்ரவரி 9ஆம் திகதி வரை விளக்கமறியலை நீட்டித்து உத்தரவிட்டார்.

இந்த வழக்கு விசாரணையை ஒட்டி திருகோணமலை நகரம் முழுவதும் பொலிஸார் பாதுகாப்புப் கடமையில் ஈடுபடுத்தப்பட்டனர்.

அசம்பாவிதங்களைத் தவிர்க்கும் நோக்கில் முக்கிய சந்திகள் மற்றும் நீதிமன்றத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்பு கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

குறைந்த அழுத்தப் பிரதேசம் தாழமுக்கமாக வலுவடையும் சாத்தியம்!
செய்திகள்

குறைந்த அழுத்தப் பிரதேசம் தாழமுக்கமாக வலுவடையும் சாத்தியம்!

September 21, 2026
மட்டக்களப்பில் சட்டவிரோதமாக T-56 துப்பாக்கி வைத்திருந்தவருக்கு ஆயுள் தண்டனை!
செய்திகள்

மட்டக்களப்பில் சட்டவிரோதமாக T-56 துப்பாக்கி வைத்திருந்தவருக்கு ஆயுள் தண்டனை!

September 21, 2026
உயர் கல்வித் தகுதி பெற்ற இளைஞர்களின் வேலையின்மை; ஆசியாவில் இலங்கை முதலிடம்!
செய்திகள்

உயர் கல்வித் தகுதி பெற்ற இளைஞர்களின் வேலையின்மை; ஆசியாவில் இலங்கை முதலிடம்!

September 21, 2026
அனோஜனின் பெற்றோரை சந்தித்தார் சஜித் – விடுதலைக்கு உதவவும் உறுதி!
செய்திகள்

அனோஜனின் பெற்றோரை சந்தித்தார் சஜித் – விடுதலைக்கு உதவவும் உறுதி!

September 21, 2026
புற்றுநோயாளிகளுக்கான அத்தியாவசிய தடுப்பூசிக்கு கடும் தட்டுப்பாடு; ஜனாதிபதியிடம் அவசர கோரிக்கை!
செய்திகள்

புற்றுநோயாளிகளுக்கான அத்தியாவசிய தடுப்பூசிக்கு கடும் தட்டுப்பாடு; ஜனாதிபதியிடம் அவசர கோரிக்கை!

September 21, 2026
சவூதியில் மரண தண்டனை பெற்ற அனோஜனின் குடும்பத்தினர் சவூதி தூதரகத்துக்கு விஜயம்!
செய்திகள்

சவூதியில் மரண தண்டனை பெற்ற அனோஜனின் குடும்பத்தினர் சவூதி தூதரகத்துக்கு விஜயம்!

September 21, 2026
Next Post
சுதந்திர தினத்தை ‘கருப்பு நாளாக’ அனுஷ்டிக்க தமிழ் மக்களுக்கு அழைப்பு; யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்

சுதந்திர தினத்தை ‘கருப்பு நாளாக’ அனுஷ்டிக்க தமிழ் மக்களுக்கு அழைப்பு; யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு