மட்டக்களப்பு செங்கலடி கொடுவாமடு கிராமத்தில் அமைந்துள்ள தர்சனம் பாலர் பாடசாலையின் புதிய மாணவர் வரவேற்பும், பொங்கல் விழா நிகழ்வும் மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்றது.
தர்சனம் பாலர் பாடசாலையின் அதிபர் க.சுஜிதா தலைமையில் நடைபெற்ற மேற்படி நிகழ்வில். மாணவர்கள், ஆசிரியர்கள் அதிதிகள் மாலை அணிவித்து வரவேற்கப்பட்டதுடன், மங்கள விளக்கேற்றலுடன் தமிழர் பாரம்பரிய முறைப்படி பொங்கல் பொங்கி பொங்கல் விழா வழிபாடுகளும் இடம்பெற்றன.
புதிய மாணவர்களின் அறிமுக நிகழ்வுகள், அதிகளின் உரை, உள்ளிட்ட சிறுவர் நிகழ்வுகளுடன் தமிழர் பாரம்பரிய முறைப்படி பொங்கல் விழா மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்றது.
இன் நிகழ்வின் பிரதம அதிதியாக சிரேஸ்ட ஊடகவியலாளரும் ஏறாவூர் பற்று பிரதேச சபை உறுப்பினருமான செ.நிலாந்தன், கொடுவாமடு சக்தி வித்தியாலய ஆசிரியர் எஸ். அல்லி, கொடுவாமடு குடும்பநல உத்தியோகத்தர் டி. தர்சினி, கொடுவாமடு மாதர் சங்க உறுப்பினர் அ. புனிதமனி , மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.




















