வரவிருக்கும் இருபதுக்கு 20 (T20) உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரை முன்னிட்டு, கொழும்பு நகரில் விசேட போக்குவரத்துத் திட்டமொன்றை நடைமுறைப்படுத்த கொழும்பு போக்குவரத்துப் பிரிவு தீர்மானித்துள்ளது.
நாளை ( 7) முதல் மார்ச் மாதம் 8-ஆம் திகதி வரை இத்திட்டம் அமுலில் இருக்கும். குறிப்பாக போட்டிகள் நடைபெறும் பின்வரும் மைதானங்களை அண்டிய பகுதிகளில் இக்கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்,
மாளிகாவத்தை ஆர். பிரேமதாச சர்வதேச விளையாட்டரங்கம். கறுவாத்தோட்டம் SSC விளையாட்டரங்கம்.
உலகக் கிண்ணப் போட்டிகளைக் காண்பதற்காக அதிகளவிலான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு ரசிகர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனவே, ரசிகர்களின் வருகையினால் ஏற்படக்கூடிய போக்குவரத்து நெரிசலைக் குறைத்து, பயணத்தை இலகுவாக்கும் நோக்கில் போட்டிகள் நடைபெறும் நாட்களுக்கு ஏற்ப இந்த விசேட ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.








