Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பில் மாநகரசபையின் செயற்பாட்டிற்கு எழுந்துள்ள கண்டனம்

மட்டக்களப்பில் மாநகரசபையின் செயற்பாட்டிற்கு எழுந்துள்ள கண்டனம்

7 months ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

மட்டக்களப்பு மத்தியஸ்தர் வீதியில் கொட்டகை அமைந்துள்ள வாகன தரிப்பிடத்தை மாநகரசபை மேலும் விஸ்தரிப்பு செய்யும் நடவடிக்கை என்பது நாங்கள் படிப்பு அறிவு இல்லாத தாழ்த்தப்பட்ட சாதியினர் என எங்களை ஒதுக்கி அடக்கி சுதந்திரமாக வாழ விடாது செய்யும் அதிகாரிகளின் செயலினால் எமது எதிர்கால சந்ததியினர் அந்த வீதியால் பிரயாணிக்க முடியாமல் செய்யும் செயலை வன்மையாக கண்டிப்பதுடன் விஸ்தரிப்பு உடன் நிறுத்த வேண்டும் என அந்த வீதியைச் சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் நாகையா ரதி தெரிவித்தார்.

மட்டக்களப்பு வொய்ஸ் ஒப் மீடியா கற்கை நிலையத்தில் நேற்று வியாழக்கிழமை (05) இடம்பெற்ற ஊடக மாநாட்டில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு வாகனங்களில் வருபவர்களின் வாகனங்கள் நிறுத்துவதற்காக நீண்ட காலமாக மத்தியஸ்தர் வீதியில் வைத்தியசாலை மதில் ஓரமாக மாநகர சபை தற்காலிக கொட்டகை அமைத்து வாகன தரிப்பிடமாக்கி அதனை குத்தகைக்கு வழங்கி வந்தனர்.

இந்த நிலையில் குறித்த வாகன தரிப்பிடம் இந்த வருடம் 75 இலட்சத்துக்கு குத்தகைக்கு வழங்கப்பட்ட நிலையில் அந்த வாகன தரிப்பிடத்தை மேலும் விஸ்தரிப்பு நடவடிக்கையினை மாநகரசபை மேற்கொண்டு வருகிறது. இந்த விஸ்தரிப்பினால் அந்த வீதியில் உள்ள குடியிருப்பாளர்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள், பெண்கள் உட்பட பொதுமக்கள் பிரயாணிக்க முடியாது பல்வேறு அசௌகரியங்களை எதிர் நோக்க வேண்டியுள்ளது.

ஏற்கனவே இந்த வீதியில் அமைக்கப்பட்ட இந்த வாகன தரிப்பிடத்தால் பல அசௌகரியங்களை எதிர்நோக்கி வரும் நிலையில், மீண்டும் இந்த வாகன தரிப்பிடத்தை விஸ்தரிப்பது இந்த வீதியில் சுதந்திரமாக குடியிருந்தும் வரும் எங்களை பாதிக்கும் செயலாகும்.

ஏசி அறையில் இருந்து கொண்டு முடிவெடுத்த அதிகாரிகள் எவரும் இந்த வீதியில் வசிப்பவர்கள் அல்ல, அவர்கள் வேறு பகுதிகளில் பெரிய வீடுகள் கட்டி சுகபோகம் செய்பவர்களுக்கு நாங்கள் ஒரு சிறிய பகுதியில் சிறிய வீடுகளை கட்டி அதில் 3 குடும்பங்கள் என பல்வேறு கஷ்டத்துக்கு மத்தியில் வாழ்ந்து வரும் ஏழைகள்.

எனவே குறித்த வாகன தரிப்பிடத்தை தற்காலிக கொட்டகை அமைத்து விஸ்தரிப்பதை நிறுத்தி எங்களை சுதந்திரமாக வாழ வழி செய்யவும் என அவர் தெரிவித்தார்.

@battinaatham_official

மட்டக்களப்பில் மாநகரசபையின் செயற்பாட்டிற்கு எழுந்துள்ள கண்டனம் https://battinaatham.net/?p=167250 #Government #srilanka #npp #anurakumaradissanayaka #help #soltft #batticalo #battinaatham

♬ original sound – battinaatham_official – battinaatham_official

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

குடு சலிந்துவின் விசாரணை ஆவணங்கள் மாயம்; நீதிமன்ற அதிகாரி தாய்லாந்திற்கு தப்பியோட்டம்
செய்திகள்

குடு சலிந்துவின் விசாரணை ஆவணங்கள் மாயம்; நீதிமன்ற அதிகாரி தாய்லாந்திற்கு தப்பியோட்டம்

September 4, 2026
மட்டக்களப்பில் அதிகாரிகளின் கவனயீனத்தால் 6 வயது சிறுவன் பலி
செய்திகள்

மட்டக்களப்பில் அதிகாரிகளின் கவனயீனத்தால் 6 வயது சிறுவன் பலி

September 4, 2026
நாமலுக்கு விளக்கமறியல்- ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு பிணை
செய்திகள்

நாமலுக்கு விளக்கமறியல்- ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு பிணை

September 4, 2026
அங்குலான கடற்படை படகு விபத்து; காணாமல் போன அதிகாரியின் சடலம் மீட்பு!
செய்திகள்

அங்குலான கடற்படை படகு விபத்து; காணாமல் போன அதிகாரியின் சடலம் மீட்பு!

September 4, 2026
அரசாங்கத்தின் நல்ல திட்டங்களை பாராட்டும் மனப்பக்குவம் எதிர்க்கட்சிகளுக்கு அவசியம்; செந்தில் தொண்டமான்
செய்திகள்

அரசாங்கத்தின் நல்ல திட்டங்களை பாராட்டும் மனப்பக்குவம் எதிர்க்கட்சிகளுக்கு அவசியம்; செந்தில் தொண்டமான்

September 4, 2026
பல மாகாணங்களில் கனமழைக்கு வாய்ப்பு; பொதுமக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!
செய்திகள்

பல மாகாணங்களில் கனமழைக்கு வாய்ப்பு; பொதுமக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

September 4, 2026
Next Post
முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் மூத்த மகன் கைது!

முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் மூத்த மகன் கைது!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.