Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கனடாவில் மக்களை தொடர்ச்சியாக தொந்தரவு செய்த குற்றச்சாட்டில் இலங்கையர் ஒருவர் கைது

கனடாவில் மக்களை தொடர்ச்சியாக தொந்தரவு செய்த குற்றச்சாட்டில் இலங்கையர் ஒருவர் கைது

5 months ago
in உலக செய்திகள், செய்திகள்

டொராண்டோ நகரம் முழுவதும் பல சம்பவங்களில் மக்களை வீடியோ பதிவு செய்து தொந்தரவு செய்ததாகக் கூறப்படும் குற்றவியல் தொந்தரவு விசாரணையைத் தொடர்ந்து இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக டொராண்டோ காவல்துறை தெரிவித்துள்ளது.

2025 ஜூன் 8ஆம் திகதி டுன்டாஸ் மற்றும் டுப்ரீன் Street பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்த ஒரு பெண், தன்னை ஒருவர் படம் பிடிப்பதை கவனித்ததாக கூறப்பட்டுள்ளது.

அவர் படம் எடுக்க வேண்டாம் என்று கேட்டபோது, அந்த நபர் எதிர்மறையாக நடந்துகொண்டதுடன் தொடர்ந்து தொந்தரவு செய்ததாகவும், அங்கு இருந்த பாதுகாப்பு பணியாளர்கள் வெளியேறுமாறு கூறியபோதும் மறுத்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பின்னர் பொலிஸார் அழைக்கப்பட்டதும், குற்றச்சாட்டுக்குரிய நபர் அந்த இடத்தை விட்டு சென்றதாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

அதே நபர் 2025 ஆகஸ்ட் 21ஆம் திகதி பிற்பகல் சுமார் 2.45 மணியளவில் ரி.ரி.சீ ஊழியரை அணுகி, அவரின் முகத்திற்கு அருகில் செல்போனை வைத்து படம் பிடித்ததுடன், அவரின் இனத்தை குறிவைத்து அவமதிப்பான கருத்துக்களையும் வெளியிட்டதாக பொலிஸார் குற்றஞ்சாட்டுகின்றனர்.

இந்த சம்பவத்திலும் காயம் எதுவும் பதிவாகவில்லை. மேலும், 2025 செப்டம்பர் 27ஆம் திகதி பிற்பகல் 3 மணியளவில் டேவிட் பீஸ் கட் சதுக்கத்தில் வரிசையில் நின்றிருந்த ஒருவரை படம் பிடித்தபோது, நிறுத்துமாறு கேட்டபோதும் அவர் மேலும் அருகில் வந்து எதிர்மறையாக நடந்துகொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நான்காவது சம்பவமாக, 2025 மே 26ஆம் திகதி யோங் மற்றும் சுட்டர் வீதிப் பகுதியில் பணியில் இருந்த பெண் பொலிஸ் உத்தியோகத்தரை அணுகி, அவரது தோற்றம் குறித்து கருத்துக்கள் தெரிவித்து படம் பிடித்ததாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

அதே அதிகாரியை 2025 அக்டோபர் 4ஆம் திகதி யோங் மற்றும் டுன்டாஸ் பகுதியில் மீண்டும் அணுகி, இதேபோன்ற கருத்துக்களை கூறியதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்த அனைத்து சம்பவங்களிலும் உடல் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை. 2025 டிசம்பர் 10ஆம் திகதி டொராண்டோவைச் சேர்ந்த 45 வயதுடைய மொஹமட் அஸ்கர் மொஹமட்-ரசிக் கைது செய்யப்பட்டு, நான்கு குற்றவியல் தொந்தரவு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

செம்மணி புதைகுழி விவகாரம்; சர்வதேச விசாரணை கோரி நாளை கவனயீர்ப்புப் போராட்டம்!
செய்திகள்

செம்மணி புதைகுழி விவகாரம்; சர்வதேச விசாரணை கோரி நாளை கவனயீர்ப்புப் போராட்டம்!

July 21, 2026
பேருந்தில் ஏற முயன்ற 6 வயது சிறுமி சக்கரத்தில் சிக்கி பலி; சாரதி தப்பியோட்டம்!
செய்திகள்

பேருந்தில் ஏற முயன்ற 6 வயது சிறுமி சக்கரத்தில் சிக்கி பலி; சாரதி தப்பியோட்டம்!

July 21, 2026
30,000 அடி உயரத்தில் ஹைப்ரிட்-மின்சார விமானம்; GE ஏரோஸ்பேஸின் புதிய சாதனை!
செய்திகள்

30,000 அடி உயரத்தில் ஹைப்ரிட்-மின்சார விமானம்; GE ஏரோஸ்பேஸின் புதிய சாதனை!

July 21, 2026
செம்மணி அகழாய்வில் அதிர்ச்சி; மண்டையோடு இன்றி எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு!
செய்திகள்

செம்மணி அகழாய்வில் அதிர்ச்சி; மண்டையோடு இன்றி எலும்புக்கூடுகள் கண்டுபிடிப்பு!

July 21, 2026
கயானா படகு விபத்தில் பலி 27 ஆக உயர்வு; 83 பேர் இன்னும் மாயம்!
செய்திகள்

கயானா படகு விபத்தில் பலி 27 ஆக உயர்வு; 83 பேர் இன்னும் மாயம்!

July 21, 2026
இ.போ.ச.க்கு 600 புதிய குளிரூட்டப்பட்ட பேருந்துகள் வாங்க அமைச்சரவை அனுமதி!
செய்திகள்

இ.போ.ச.க்கு 600 புதிய குளிரூட்டப்பட்ட பேருந்துகள் வாங்க அமைச்சரவை அனுமதி!

July 21, 2026
Next Post
O/L பரீட்சையில் சித்தியடைந்த 300 மாணவர்களுக்கு நிதியுதவி

O/L பரீட்சையில் சித்தியடைந்த 300 மாணவர்களுக்கு நிதியுதவி

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு