Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பாலையடிவட்டை பாரதி பாலர் பாடசாலையில் புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு

பாலையடிவட்டை பாரதி பாலர் பாடசாலையில் புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு

7 months ago
in செய்திகள், மட்டு செய்திகள்

கிழக்கு மாகாண சபையின் கீழ் இயங்கி வரும் மட்டக்களப்பு, போரதீவுப்பற்று – பாலையடிவட்டை பாரதி பாலர் பாடசாலையில் 2026ஆம் கல்வி ஆண்டுக்கான புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு நேற்று முன்தினம் (09) வெகுவிமர்சையாக நடைபெற்றது.

பாலர் பாடசாலை ஆசிரியரின் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில், போரதீவுப்பற்று பிரதேச சபையின் உப தவிசாளர் த. கயசீலன் அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு சிறப்பித்தார்.
நிகழ்வின் ஆரம்பத்தில், பாடசாலையின் பழைய மாணவர்கள் புதிய மாணவர்களுக்கு மலர் மாலை அணிவித்து இன்முகத்துடன் வரவேற்பு அளித்தனர்.

அதனைத் தொடர்ந்து மாணவர்களின் கலை நிகழ்வுகள் மேடையேற்றப்பட்டதுடன், அதிதிகளினால் மாணவர்களுக்கு அடையாள அட்டைகளும் பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.

இப் பாடசாலையில் தற்போது மின்சார வசதி இல்லாமை மற்றும் மாணவர்களின் விளையாட்டு உபகரணங்கள் உடைந்த நிலையில் காணப்படுவது தொடர்பில் இதன்போது அதிதிகளின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.

“தற்போது மாகாண சபையினால் வழங்கப்படும் 6,000 ரூபாய் கொடுப்பனவு ஆசிரியர்களுக்கு போதுமானதாக இல்லை. இதனை அதிகரிப்பதற்கான உரிய நடவடிக்கைகளை முன்னெடுப்பேன். அத்துடன், பாடசாலையின் நீண்டகாலத் தேவையாக உள்ள மின்சார இணைப்பினை மிக விரைவில் பெற்றுத் தருவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும்” என பிரதேசசபையின் உபதவிசாளர் இதன்போது உறுதியளித்தார்.

இந்நிகழ்வில் சமாதான நீதவான் கோபாலசிங்கம், கிராம அபிவிருத்திச் சங்க நிர்வாகிகள், ஆலய நிருவாகத்தினர், விவசாய அமைப்பின் பிரதிநிதிகள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

அங்குலான கடற்படை படகு விபத்து; காணாமல் போன அதிகாரியின் சடலம் மீட்பு!
செய்திகள்

அங்குலான கடற்படை படகு விபத்து; காணாமல் போன அதிகாரியின் சடலம் மீட்பு!

September 4, 2026
அரசாங்கத்தின் நல்ல திட்டங்களை பாராட்டும் மனப்பக்குவம் எதிர்க்கட்சிகளுக்கு அவசியம்; செந்தில் தொண்டமான்
செய்திகள்

அரசாங்கத்தின் நல்ல திட்டங்களை பாராட்டும் மனப்பக்குவம் எதிர்க்கட்சிகளுக்கு அவசியம்; செந்தில் தொண்டமான்

September 4, 2026
பல மாகாணங்களில் கனமழைக்கு வாய்ப்பு; பொதுமக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!
செய்திகள்

பல மாகாணங்களில் கனமழைக்கு வாய்ப்பு; பொதுமக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

September 4, 2026
புலமைப்பரிசில் பரீட்சையில் மிக்கேல் கல்லூரிக்கு பெருமை சேர்த்த அகர்வின்
செய்திகள்

புலமைப்பரிசில் பரீட்சையில் மிக்கேல் கல்லூரிக்கு பெருமை சேர்த்த அகர்வின்

September 4, 2026
21 நாடுகளில் 2 கோடி குழந்தைகள் இணையவழி பாலியல் துஷ்பிரயோகத்துக்கு இலக்கு; UNICEF அதிர்ச்சி தகவல்
உலக செய்திகள்

21 நாடுகளில் 2 கோடி குழந்தைகள் இணையவழி பாலியல் துஷ்பிரயோகத்துக்கு இலக்கு; UNICEF அதிர்ச்சி தகவல்

September 4, 2026
வெள்ளத்தையும் பொருட்படுத்தாது தேவாலயத்தில் திருமணம் செய்த இளம் ஜோடி!
உலக செய்திகள்

வெள்ளத்தையும் பொருட்படுத்தாது தேவாலயத்தில் திருமணம் செய்த இளம் ஜோடி!

September 4, 2026
Next Post
முன்னாள் எம்.பி படுகொலை; 12 பிரதிவாதிகளுக்கு மரண தண்டனை விதிப்பு

முன்னாள் எம்.பி படுகொலை; 12 பிரதிவாதிகளுக்கு மரண தண்டனை விதிப்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு