Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மேலே ஐஸ் கட்டிகள் அடுக்கப்பட்டு வராந்தாவில் கிடக்கும் சடலங்கள்; தங்காலை ஆதார வைத்தியசாலையில் அவலநிலை

மேலே ஐஸ் கட்டிகள் அடுக்கப்பட்டு வராந்தாவில் கிடக்கும் சடலங்கள்; தங்காலை ஆதார வைத்தியசாலையில் அவலநிலை

7 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

தங்காலை ஆதார வைத்தியசாலையின் பிணவறையில் இடவசதி இல்லாமையினால், சடலங்களின் மீது ஐஸ் கட்டிகளை அடுக்கி, அவற்றை பிணவறைக்கு முன்னால் உள்ள வராந்தாவிலேயே வைக்கும் அவலநிலை தொடர்பில் தகவல் வௌியாகியுள்ளது.

பெலியத்த, நாக்குலுகமுவ, ரன்ன, அங்குணகொலபெலஸ்ஸ, வீரகெட்டிய போன்ற பிரதேச மற்றும் மாவட்ட வைத்தியசாலைகளில் உயிரிழப்பவர்கள் மற்றும் விபத்துக்களில் பலியாகும் நபர்களின் சடலங்கள் பிரேதப் பரிசோதனைக்காகத் தங்காலை ஆதார வைத்தியசாலைக்கே அனுப்பி வைக்கப்படுகின்றன.

அந்தப் பரிசோதனைகள் நிறைவடையும் வரை சடலங்கள் அங்கேயே வைக்கப்படுகின்றன.

இருப்பினும், கடந்த 4 வருடங்களாக வைத்தியசாலையில் போதியளவான குளிரூட்டி வசதிகள் இல்லாமை ஒரு பாரிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பழைய பிணவறையில் ஒரே நேரத்தில் 6 சடலங்களை வைக்கக்கூடிய குளிரூட்டி வசதி இருந்த போதிலும், அது தற்போது மீண்டும் திருத்த முடியாத அளவுக்குப் பழுதடைந்துள்ளது.

இதனால் அந்தப் பழைய குளிரூட்டியைப் பயன்படுத்த முடியாதுள்ளதாக வைத்தியசாலை ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.

புதிய பிணவறையில் தற்போது 2 சடலங்களை மட்டுமே வைக்கக்கூடிய வசதி உள்ள நிலையில், அது போதுமானதாக இல்லை என ஊழியர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இதன் காரணமாகவே சடலங்களைப் பாதுகாப்பாக வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இன்று (12) காலை பிணவறை சடலங்களால் நிரம்பி வழிந்ததால், சடலங்களை வண்டிகளில் வைத்து அவற்றின் மேல் ஐஸ் கட்டிகளை அடுக்குவதற்கு ஊழியர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இதன்படி, ஐஸ் வைக்கப்பட்ட 3 சடலங்கள் பிணவறைக்கு வெளியேயுள்ள வராந்தாவிலும், மற்றொரு சடலம் குளிரூட்டிக்கு வெளியேயுள்ள வண்டியிலும் வைக்கப்பட்டிருந்தன.

உயிரிழந்தவர்களின் உறவினர்களையே ஐஸ் கட்டிகளைக் கொண்டு வருமாறு கோரப்பட்டதால் அவர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.

இந்தப் பிணவறை இடநெருக்கடி குறித்து நீண்டகாலமாக சுகாதார அதிகாரிகளுக்குத் தெரியப்படுத்தியும் இதுவரையில் எவ்விதத் தீர்வும் கிடைக்கவில்லை என வைத்தியசாலை ஊழியர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

புலிகளின் ஆயுதங்கள் பாதாள உலகக் குழுக்களிடம் உள்ளதா? பொலிஸார் விசாரணை
செய்திகள்

புலிகளின் ஆயுதங்கள் பாதாள உலகக் குழுக்களிடம் உள்ளதா? பொலிஸார் விசாரணை

September 13, 2026
ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு இறக்குமதியாகும் கார்களின் ஸ்மார்ட் சாவிகளை திருடிவந்தவர்கள் கைது
செய்திகள்

ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு இறக்குமதியாகும் கார்களின் ஸ்மார்ட் சாவிகளை திருடிவந்தவர்கள் கைது

September 13, 2026
எரிபொருள் விலைகளை அதிகரிக்க விநியோகஸ்தர்கள் சங்கம் கோரிக்கை
செய்திகள்

எரிபொருள் விலைகளை அதிகரிக்க விநியோகஸ்தர்கள் சங்கம் கோரிக்கை

September 13, 2026
தெஹிவளை கைக்குண்டுத் தாக்குதல்; இரு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் குறித்து ஐ.நா கவலை!
செய்திகள்

தெஹிவளை கைக்குண்டுத் தாக்குதல்; இரு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் குறித்து ஐ.நா கவலை!

September 12, 2026
ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதிகள் அல்ல அவர்கள் தீவிரவாதிகள் !
செய்திகள்

ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதிகள் அல்ல அவர்கள் தீவிரவாதிகள் !

September 12, 2026
கைது செய்யப்பட்ட ஷிரான் பாஸிக்கின் தந்தை விளக்கமறியலில்
செய்திகள்

கைது செய்யப்பட்ட ஷிரான் பாஸிக்கின் தந்தை விளக்கமறியலில்

September 12, 2026
Next Post
கடவுச்சீட்டு கணினி அமைப்பு வழமைக்கு; தாமதத்தை மீட்டெடுக்க நான்கு நாட்கள் தேவை

கடவுச்சீட்டு கணினி அமைப்பு வழமைக்கு; தாமதத்தை மீட்டெடுக்க நான்கு நாட்கள் தேவை

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு