Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மது வரி அதிகரித்தல் குழுவின் கலந்துரையாடல்; போதைப்பொருள் குற்றங்கள் அறிவிக்க மக்களுக்கு அழைப்பு-1913

மது வரி அதிகரித்தல் குழுவின் கலந்துரையாடல்; போதைப்பொருள் குற்றங்கள் அறிவிக்க மக்களுக்கு அழைப்பு-1913

7 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

நாட்டின் எந்தவொரு பகுதியிலும் நிகழும் மது மற்றும் போதைப்பொருள் குற்றங்கள் குறித்த தகவல்களை 1913 என்ற அவசர இலக்கத்தின் மூலம் மதுவரித் திணைக்களத்திற்கு தெரிவிக்குமாறு மக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

மதுவரித் திணைக்களத்தின் வரி வருமானத்தை அதிகரித்தல் மற்றும் கட்டமைப்பு ரீதியான மறுசீரமைப்புகளுக்கான செயற்பாட்டுக் குழுவின் கூட்டம் பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் நிஷாந்த ஜயவீர மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது

ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று (13) முற்பகல் இந்தக் கூட்டம் நடைபெற்றது.

மதுவரித் திணைக்களத்தின் செயல்பாடுகளை மிகவும் வெளிப்படைத்தன்மையுடனும் செயற்திறனாகவும் முன்னெடுப்பதற்காக இரண்டு ஆண்டுகளுக்குள் நிறைவுசெய்ய உத்தேசிக்கப்பட்ட மதுவரி வருமான முகாமைத்துவக் கட்டமைப்பின் முன்னேற்றம் குறித்து விரிவாக கலந்துரையாடப்பட்டது.

தற்போதைய அரசாங்கத்தின் அரச நிறுவன நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ் மதுவரித் திணைக்களத்தின் நவீனமயமாக்கல் மற்றும் மறுசீரமைப்புகளுக்கு உயர் ஒத்துழைப்பை எதிர்பார்ப்பதாக பிரதி அமைச்சர் தெரிவித்தார்.

மதுவரித் திணைக்களத்தின் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் மற்றும் அனைத்து அதிகாரிகளும் இதற்கு முழு ஆதரவைத் தெரிவித்தனர்.

மேலும், மதுவரித் திணைக்களம் கடந்த 2025 ஆம் ஆண்டில் அடையப்பட்ட நிதி செயற்பாடுகளுக்காக பிரதி அமைச்சர் மற்றும் ஜனாதிபதியின் செயலாளர் பாராட்டியதுடன், இந்த ஆண்டு மேலும் உயர் நிதி முன்னேற்றத்தை அடைய தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று மதுவரித் திணைக்கள அதிகாரிகள் உறுதியளித்தனர்.

தற்போதைய சமூக மற்றும் தொழில்நுட்ப போக்குகளுக்கு ஏற்ப மதுவரிக் கட்டளைச் சட்டத்தை திருத்தும் பணிகளை விரைவுபடுத்தவும், அடுத்த இரண்டு வாரங்களுக்குள் திருத்தங்களை நிறைவு செய்து சட்டவரைஞருக்கு அனுப்பி வைக்கவும் முடிவு செய்யப்பட்டது.

மதுவரித் திணைக்களத்தின் செயல்திறனை அதிகரிக்க புதிய சேவை யாப்பின் அவசியத்தை குழு வலியுறுத்தியதுடன் இதற்கு மேலதிகமாக அதிகாரிகளின் பதவி உயர்வுகள் மற்றும் போதைப்பொருள் தடுப்பு பிரிவை வலுப்படுத்துவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.

மேலும், நாட்டில் சட்டவிரோத மது வர்த்தகம் தொடர்பான குற்றங்களைத் தடுப்பதில் பொதுமக்களின் ஆதரவைப் பெற, எந்தவொரு பகுதியிலும் நிகழும் மது மற்றும் போதைப்பொருள் குற்றங்கள் குறித்த தகவல்களை 1913 என்ற அவசர இலக்கத்தின் மூலம் மதுவரித் திணைக்களத்திற்கு தெரிவிக்குமாறு மதுவரித் திணைக்களத்தின் வரி வருமானத்தை அதிகரித்தல் மற்றும் கட்டமைப்பு ரீதியான மறுசீரமைப்புகளுக்கான செயற்பாட்டுக் குழு பொதுமக்களைக் கேட்டுக்கொண்டது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

குறைந்த அழுத்தப் பிரதேசம் தாழமுக்கமாக வலுவடையும் சாத்தியம்!
செய்திகள்

குறைந்த அழுத்தப் பிரதேசம் தாழமுக்கமாக வலுவடையும் சாத்தியம்!

September 21, 2026
மட்டக்களப்பில் சட்டவிரோதமாக T-56 துப்பாக்கி வைத்திருந்தவருக்கு ஆயுள் தண்டனை!
செய்திகள்

மட்டக்களப்பில் சட்டவிரோதமாக T-56 துப்பாக்கி வைத்திருந்தவருக்கு ஆயுள் தண்டனை!

September 21, 2026
உயர் கல்வித் தகுதி பெற்ற இளைஞர்களின் வேலையின்மை; ஆசியாவில் இலங்கை முதலிடம்!
செய்திகள்

உயர் கல்வித் தகுதி பெற்ற இளைஞர்களின் வேலையின்மை; ஆசியாவில் இலங்கை முதலிடம்!

September 21, 2026
அனோஜனின் பெற்றோரை சந்தித்தார் சஜித் – விடுதலைக்கு உதவவும் உறுதி!
செய்திகள்

அனோஜனின் பெற்றோரை சந்தித்தார் சஜித் – விடுதலைக்கு உதவவும் உறுதி!

September 21, 2026
புற்றுநோயாளிகளுக்கான அத்தியாவசிய தடுப்பூசிக்கு கடும் தட்டுப்பாடு; ஜனாதிபதியிடம் அவசர கோரிக்கை!
செய்திகள்

புற்றுநோயாளிகளுக்கான அத்தியாவசிய தடுப்பூசிக்கு கடும் தட்டுப்பாடு; ஜனாதிபதியிடம் அவசர கோரிக்கை!

September 21, 2026
சவூதியில் மரண தண்டனை பெற்ற அனோஜனின் குடும்பத்தினர் சவூதி தூதரகத்துக்கு விஜயம்!
செய்திகள்

சவூதியில் மரண தண்டனை பெற்ற அனோஜனின் குடும்பத்தினர் சவூதி தூதரகத்துக்கு விஜயம்!

September 21, 2026
Next Post
எப்ஸ்டீன் கோப்புக்கள் விவகாரம்; கனடிய பேராசிரியர் பதவி விலகல்

எப்ஸ்டீன் கோப்புக்கள் விவகாரம்; கனடிய பேராசிரியர் பதவி விலகல்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.