Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வத்தளை பகுதியில் வெடிமருந்துகளுடன் முன்னாள் இராணுவ வீரர் கைது

வத்தளை பகுதியில் வெடிமருந்துகளுடன் முன்னாள் இராணுவ வீரர் கைது

9 months ago
in செய்திகள்

வத்தளை பகுதியில், வெடிமருந்துகளுடன் முன்னாள் இராணுவ வீரர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த 13ஆம் திகதி, மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்பு பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட சோதனையின் போதே, வெடிமருந்துகள் அடங்கிய பொதியொன்று கண்டுப்பிடிக்கப்பட்டது.

அதில், 04 ரி – 56 ரக வெடிமருந்துகள், 04 ரிவால்வர் ரக வெடிமருந்துகள், 02 பிஸ்டல் ரக வெடிமருந்துகள் மற்றும் 11 வகையான சிம் அட்டைகள் என்பன காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனை தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில், அவற்றை மறைத்து வைத்திருந்ததாக சந்தேகிக்கப்படும் ஒருவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை (15) காலை தெல்வல – உதாதலகம பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் பொல்பாகொடை – யக்கலமுல்ல பகுதியை சேர்ந்த 35 வயதுடைய முன்னாள் இராணுவ வீரர் என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மேலும், குறித்த சந்தேகநபருக்கு கல்னேவ, கல்தோட்டை மற்றும் எல்பிட்டிய நீதிமன்றங்களால் பிடியாணை மற்றும் திறந்த பிடியாணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

சந்தேகநபர் தொடர்பான மேலதிக விசாரணைகளுக்காக நீதிமன்றத்திலிருந்து 72 மணித்தியால தடுப்புக்காவல் உத்தரவு பெறப்படவுள்ளதுடன், இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேல் மாகாண வடக்கு குற்றத்தடுப்பு பிரிவு மேற்கொண்டு வருகிறது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

பழுகாமம் பகுதியில் 20 லீற்றர் கசிப்பு மீட்பு; பெண் ஒருவர் கைது!
செய்திகள்

பழுகாமம் பகுதியில் 20 லீற்றர் கசிப்பு மீட்பு; பெண் ஒருவர் கைது!

November 5, 2026
மட்டக்களப்பில் 2024ஆம் ஆண்டு வீடு உடைத்து கையடக்கத் தொலைபேசி, பணம் திருட்டு; 4 பேர் கைது!
செய்திகள்

மட்டக்களப்பில் 2024ஆம் ஆண்டு வீடு உடைத்து கையடக்கத் தொலைபேசி, பணம் திருட்டு; 4 பேர் கைது!

November 5, 2026
சர்வதேச கால்பந்தில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார் கிறிஸ்டியானோ ரொனால்டோ!
செய்திகள்

சர்வதேச கால்பந்தில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார் கிறிஸ்டியானோ ரொனால்டோ!

November 5, 2026
ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத் தடுப்புச் சட்டமூலம்; 72 மணித்தியால தடுப்புக்காவலை 48 மணித்தியாலங்களாகக் குறைக்க ஜனாதிபதி தீர்மானம்!
செய்திகள்

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றத் தடுப்புச் சட்டமூலம்; 72 மணித்தியால தடுப்புக்காவலை 48 மணித்தியாலங்களாகக் குறைக்க ஜனாதிபதி தீர்மானம்!

November 5, 2026
தேசிய மக்கள் சக்தியின் மஹர பிரதேச சபை தவிசாளர் பதவி விலகத் தீர்மானம்!
செய்திகள்

தேசிய மக்கள் சக்தியின் மஹர பிரதேச சபை தவிசாளர் பதவி விலகத் தீர்மானம்!

November 5, 2026
பயணிகளுக்கு பாதுகாப்பான நாடுகள் பட்டியலில் கனடா முதலிடம்
செய்திகள்

பயணிகளுக்கு பாதுகாப்பான நாடுகள் பட்டியலில் கனடா முதலிடம்

November 5, 2026
Next Post
வவுனியா மாவட்டத்தில் சுமார் 7,999 குடும்பங்களை பெண்களே தலைமைதாங்குகின்றனர்

வவுனியா மாவட்டத்தில் சுமார் 7,999 குடும்பங்களை பெண்களே தலைமைதாங்குகின்றனர்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு