இந்தியா – பாகிஸ்தானுக்கு இடையில் இடம்பெற்ற டி 20 உலகக்கிண்ண போட்டி நேற்றைய தினம் (15) இடம்பெற்றிருந்தது.
இதன்போது இந்திய அணி 61 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றியை தனதாக்கிக்கொண்டது.
இதனடிப்படையில், பாகிஸ்தான் அணியினரின் தனிப்பட்ட பாதுகாப்பை கருத்திற்கொண்டு விசேட தனியார் ஜெட்ரக விமானங்கள் நேற்று கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்கு வருகைதந்துள்ளது.
குறித்த விமானங்கள் பாகிஸ்தான் விமானப்படைக்கு சொந்தமான விமானங்களாகும்.
இந்த போட்டிக்கு உலகம் முழுவதும் உள்ள பெரும் வரவேற்பை இது எடுத்துக் காட்டுவதாகவும் இது அமைந்துள்ளது.
மேலும் பாகிஸ்தான் அணினரின் பாதுகாப்பை உறுதிபடுத்தும் நோக்கில் குறித்த விமானங்கள் வருகை தந்திருக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.








