Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு எதிராக மாபெரும் மக்கள் எழுச்சிப் போராட்டம்!

பயங்கரவாதத் தடைச் சட்டத்திற்கு எதிராக மாபெரும் மக்கள் எழுச்சிப் போராட்டம்!

6 months ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

மட்டக்களப்பில் இன்று (28) சனிக்கிழமை, பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கக் கோரி மற்றும் அரசாங்கத்தினால் முன்மொழியப்படும் புதிய “பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் சட்டத்திற்கு” எதிராக ஆர்ப்பாட்ட ஊர்வலம் நடைபெற்றது. கல்லடி பாலத்தில் இருந்து தொடங்கிய ஊர்வலம் காந்தி பூங்கா வரை சென்றது.

தாயக செயலணி அமைப்பின் இணைப்பாளர் இ.செல்வகுமாரின் அழைப்பின் பேரில், பாராளுமன்ற உறுப்பினர்கள் வைத்தியர் சிறிநாத், இரா.சாணக்கியன், க. கோடீஸ்வரன் மற்றும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சி மற்றும் தமிழரசு கட்சி உறுப்பினர்கள், காணாமல் போன உறவுகள் மற்றும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் இதில் கலந்தனர்.

ஆர்ப்பாட்ட ஊர்வலத்தில், பயங்கரவாதத் தடைச் சட்டமும் வேண்டாம், அரசை பாதுகாக்கும் புதிய சட்டமும் வேண்டாம், நாட்டில் உள்ள குற்றவியல் சட்டமே போதும், “பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் பெயரில் இழந்த உயிர்கள் போதாதா?” எனக் குறிக்கும் சுலோகங்கள் ஏந்தப்பட்டு கோஷம் எழுப்பப்பட்டது.

ஊர்வலம் அரசடி வீதி மற்றும் மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலைய வீதியைக் கடந்து காந்தி பூங்காவை அடைந்தது. அங்கு பகல் 11.30 மணி வரை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பின்னர் ஆர்ப்பாட்டக்காரர்கள் அறிக்கை பிரகணம் செய்ததையடுத்து திரும்பினர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

மல்வத்து ஓயா நீர்த்தேக்கத் திட்டத்தை நிறைவு செய்ய அரசாங்கம் இலக்கு; ஜனாதிபதி அநுர!
செய்திகள்

மல்வத்து ஓயா நீர்த்தேக்கத் திட்டத்தை நிறைவு செய்ய அரசாங்கம் இலக்கு; ஜனாதிபதி அநுர!

September 5, 2026
நானுஓயா கிளாஸ்சோ நீர்வீழ்ச்சியில் நீரில் மூழ்கி இருவர் உயிரிழப்பு
செய்திகள்

நானுஓயா கிளாஸ்சோ நீர்வீழ்ச்சியில் நீரில் மூழ்கி இருவர் உயிரிழப்பு

September 5, 2026
பலாலி அந்தோனிபுரத்தில் கிணற்றுக்குள் பெருமளவு வெடிபொருட்கள் கண்டெடுப்பு!
செய்திகள்

பலாலி அந்தோனிபுரத்தில் கிணற்றுக்குள் பெருமளவு வெடிபொருட்கள் கண்டெடுப்பு!

September 5, 2026
காரைதீவில் அதிகரிக்கும் யானைகள் நடமாட்டம்; உடனடி நடவடிக்கை கோரும் பிரதேச சபை தவிசாளர்!
செய்திகள்

காரைதீவில் அதிகரிக்கும் யானைகள் நடமாட்டம்; உடனடி நடவடிக்கை கோரும் பிரதேச சபை தவிசாளர்!

September 5, 2026
ஆபிரிக்காவின் உண்மையான அளவைக் காட்டும் புதிய உலக வரைபடம் விரைவில்!
செய்திகள்

ஆபிரிக்காவின் உண்மையான அளவைக் காட்டும் புதிய உலக வரைபடம் விரைவில்!

September 5, 2026
நெடுந்தூர தனியார் பேருந்துகளில் AI கண்காணிப்பு; பாதுகாப்பை மேம்படுத்த புதிய திட்டம்!
செய்திகள்

நெடுந்தூர தனியார் பேருந்துகளில் AI கண்காணிப்பு; பாதுகாப்பை மேம்படுத்த புதிய திட்டம்!

September 5, 2026
Next Post
ஈரான் மீதான தாக்குதல்களைத் தொடர்ந்து வான்பரப்பை மூடிய ஈராக்!

ஈரான் மீதான தாக்குதல்களைத் தொடர்ந்து வான்பரப்பை மூடிய ஈராக்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு