ஈரானுடன் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், அமெரிக்கா தனது மிக வலிமையான கண்டம் விட்டு கண்டம் பாயும் மினிட்மேன் III (Minuteman III) ஏவுகணையை சோதனை செய்துள்ளது.
அமெரிக்க விமானப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட இந்த சோதனை, அணு தடுப்பு திறனை உறுதிப்படுத்தும் நோக்கில் வழக்கமான முறையில் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகவல்களின் படி, மினிட்மேன் III ஏவுகணை ஹிரோஷிமாவில் வீசப்பட்ட அணுகுண்டை விட சுமார் 20 மடங்கு அதிக சக்தி கொண்டதாக கூறப்படுகிறது.
இந்த ஏவுகணை ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் தூரம் வரை பாயும் திறன் கொண்டதாகவும், அமெரிக்காவின் முக்கிய அணு தடுப்பு ஆயுதங்களில் ஒன்றாகவும் கருதப்படுகிறது.








