Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இலங்கை தமிழா் மறுவாழ்வு முகாமின் தலைவா் முகாமில் வெட்டிக்கொலை

இலங்கை தமிழா் மறுவாழ்வு முகாமின் தலைவா் முகாமில் வெட்டிக்கொலை

6 months ago
in உலக செய்திகள், செய்திகள், முக்கிய செய்திகள்

தமிழகம் கும்மிடிப்பூண்டி பெத்திக்குப்பம் பகுதியில் உள்ள இலங்கை தமிழா் மறுவாழ்வு முகாமின் தலைவா் நேற்று (07) இரவு இலங்கை தமிழா் மறுவாழ்வு முகாமில் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

கும்மிடிப்பூண்டியில் உள்ள இலங்கை தமிழா் மறுவாழ்வு முகாமில், 937 குடும்பங்களைச் சோ்ந்த 2,770 போ் வசித்து வருகின்றனா்.

அந்த முகாமின் தலைவராக இருப்பவா் சிவகுமாா் என்கிற கண்ணன் (42). இவா் நேற்று (07) இரவு முகாம் பகுதியில் ஒரு பிரச்சினைக்காக சமரசம் செய்ய சென்றாா். அப்போது மா்ம கும்பலை சோ்ந்தவா்கள் அவரின் முகத்தில் சரமாரியாக வெட்டினா்.

ஆபத்தான நிலையில் கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட சிவக்குமாரை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா். இதுகுறித்து தகவல் அறிந்த இலங்கை தமிழா் மறுவாழ்வு முகாமை சோ்ந்த 300க்கும் மேற்பட்டோா் கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டனா்.

இதைத் தொடா்ந்து, மருத்துவமனை வளாகத்தில் பதற்றமான சூழல் நிலவியதால், பொலிஸாா் உடனடியாக ஆம்புலன்ஸை வரவழைத்து, கண்ணனின் சடலத்தை பிரேதப் பரிசோதனைக்காக பொன்னேரி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

இந்த நிலையில், கும்மிடிப்பூண்டி சிப்காட் பொலிஸாரின் விசாரணையில், முகாமைச் சோ்ந்த கும்பல் ஒன்று, முன் விரோதம் காரணமாக சிவக்குமாரை கொலை செய்ததாக கூறப்படுகிறது.

இந்த சூழலில் கும்மிடிப்பூண்டி இலங்கை தமிழா் மறுவாழ்வு முகாமில் பதற்றமான சூழல் நிலவுவதால், ஏராளமான பொலிஸார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனா். மேலும் இந்த கொலை சம்பவம் குறித்து கும்மிடிப்பூண்டி சிப்காட் பொலிஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

Tags: BatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு ஆரம்பம்
செய்திகள்

உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு ஆரம்பம்

September 6, 2026
தற்போதைய உலக வரைபடத்தை மாற்ற ஐ.நா. தீர்மானம்
செய்திகள்

தற்போதைய உலக வரைபடத்தை மாற்ற ஐ.நா. தீர்மானம்

September 6, 2026
கிழக்கு மாகாணத்திற்கு மின்னல் எச்சரிக்கை
செய்திகள்

கிழக்கு மாகாணத்திற்கு மின்னல் எச்சரிக்கை

September 6, 2026
”எமது இளைய தளபதி நாமல் ராஜபக்ஷ”; கைது குறித்து மட்டக்களப்பிலிருந்து எழுந்துள்ள கண்டனம்
உலக செய்திகள்

”எமது இளைய தளபதி நாமல் ராஜபக்ஷ”; கைது குறித்து மட்டக்களப்பிலிருந்து எழுந்துள்ள கண்டனம்

September 6, 2026
டெங்கு நோயின் அச்சம் அதிகரிப்பு; மரணங்களும் பதிவு
செய்திகள்

டெங்கு நோயின் அச்சம் அதிகரிப்பு; மரணங்களும் பதிவு

September 6, 2026
பலாலியில் கிணற்றுக்குள் பெருமளவு வெடிபொருட்கள்; மீட்பு நடவடிக்கை தீவிரம்
செய்திகள்

பலாலியில் கிணற்றுக்குள் பெருமளவு வெடிபொருட்கள்; மீட்பு நடவடிக்கை தீவிரம்

September 6, 2026
Next Post
திருகோணமலையில் வீட்டின் கூரையிலிருந்து இரண்டு கை குண்டுகள் மீட்பு!

திருகோணமலையில் வீட்டின் கூரையிலிருந்து இரண்டு கை குண்டுகள் மீட்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு